வாஷிங்க்டன்: அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னுடைய சொந்த தாத்தாவையே, யாரென்று தெரியாமல் திருமணம் செய்து கொண்ட வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதுபற்றி அமெரிக்காவில் இருந்து வெளிவரும் 'ப்ளோரிடா சன் போஸ்ட்' பத்திரிகையில் வெளியாகியிருக்கும் செய்தி விபரம் வருமாறு:
அமெரிக்காவை ப்ளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த முதியவர்(68) ஒருவருக்கு சமீபத்தில் லாட்டரியில் பல லட்ச ருபாய் பரிசு விழுந்துள்ளது. ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து விவகாரத்தாகியுள்ள அவர் மீண்டும் ஒரு திருமணம் செய்வது என்று முடிவெடுத்து அதற்கென உள்ள நிறுவனம் ஒன்றை அணுகியிருக்கிறார். அவர்கள் காண்பித்த புகைப்படங்களில் 24 வயது பெண் ஒருத்தியின் புகைப்பபடம் பிடித்திருக்கவே அவளை உணவகம் ஒன்றில் சந்தித்திருக்கிறார். பார்த்த உடனேயே பிடித்துவிட்டதால் இருவரும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னால் திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர்.
அதன் பிறகு ஒரு நாள் வீட்டில் ஓய்வாக இருக்கும் போது கணவனின் ஒரு புகைப்பட ஆல்பம் ஒன்றை பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில், அவருடைய முதல் மனைவி மற்றும் அவர்களது குழந்தைகள் புகைப்படங்களை பார்த்தவருக்கு பயங்கர அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் அவருடைய முதல் மனைவியின் குழந்தைகளில் ஒருவர்தான் அவளது அப்பா. இதனால் அந்த இளம்பெண் மிகுந்த அதிர்ச்சி அடைந்தார்.
இது பற்றி தனது கணவனிடம் தெரிவித்த பொழுது, அவரது முதல் மனைவிக்கும் அவருக்கும் சண்டைவந்து அவர் திடீரென்று குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டாள் என்றும், அவளைக் கண்டுப்பிடிக்க தான் செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததையும் தெரிவித்தார். பின்னர் சில வருடங்களுக்கு பிறகு தான் செய்த இரண்டாவது திருமணமும் தோல்வியில்முடிந்தது என்றும், அந்த திருமணம் மூலம் தனக்கு குழந்தைள் பிறந்தன என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.அதன் பின்னர் 2005-ஆம் ஆண்டு லாட்டரியில் ஜாக்பாட் வென்ற உடனேதான், மீண்டும் மூன்றாவது முறை திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தாகவும் அவர் விளக்கினார்.
அதற்கு பிறகு சுதாரித்துக் கொண்ட அந்தப் பெண் கூறும்பொழுது, 'எங்களது பந்தம் மிகவும் உறுதியானது என்று கருதுகிறேன். இதுபோன்ற எந்த விஷயத்தாலும் எங்களை பிரிக்க முடியாது' என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருப்பூா் மாவட்டத்தில் 5,071 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி! - சுகாதாரத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் வழங்கினாா்

தக்கலை அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணி அரசுப் பேருந்தை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம்







