பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க முடியாது: அமெரிக்கா 'பல்டி'!
பாகிஸ்தானை பயங்கரவாத நாடு என்று அறிவிக்க முடியாது என்று அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது.


வாஷிங்டன்: பாகிஸ்தானை பயங்கரவாத நாடு என்று அறிவிக்க முடியாது என்று அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி இன்று வழக்கமான தனது செய்தியாளர் சந்திப்பின் பொழுது தெரிவித்ததாவது:
பாகிஸ்தானை பயங்கரவாத நாடு என்று அறிவிக்க வகை செய்யும் மசோதா அல்லது இணையதள கோரிக்கை மனு என எதுவாகயிருந்தாலும் கண்டிப்பாக அதற்கு ஆதரவு அளிக்க மாட்டோம். அதே சமயம் அந்த பிராந்தியத்தில் உள்ள அரசாங்கங்களுடன் தொடர்பு கொண்டு, இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் தீவிரவாத முகாம்களை அகற்றுவதற்கு உதவுவோம்.
காஷ்மீர் விவகாரத்தை பொருத்த வரை அமெரிக்காவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இந்த விவகாரத்தை இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் ஒன்றாக இணைந்து ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும்.
தற்சமயம் இருநாடுகளுக்கு இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலை குறைய போதிய முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...