6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நண்பரைக் கொன்ற வழக்கு: சவூதி இளவரசருக்கு மரண தண்டனை!

தனது நண்பரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வழக்கில் சவூதி அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசர் ஒருவருக்கு இன்று மரண தண்டனை நிறைவற்றப்பட்டுள்ளது.

News image
Updated On :19 அக்டோபர் 2016, 12:00 pm

ரியாத்: தனது நண்பரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வழக்கில் சவூதி அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசர் ஒருவருக்கு இன்று மரண தண்டனை நிறைவற்றப்பட்டுள்ளது.

சவூதி அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் இளவரசர் துர்கி பின் சவுத் அல் கபீர்.  இவர் கடந்த 2012-ஆம் ஆண்டு ரியாத்தில் எல்லைப்பகுதியில் இருந்த பாலைவன முகாம் ஒன்றில் தங்கியிருந்த பொழுது, அவருடன் தங்கியிருந்த நண்பர் அடெல் அல் மெஹிமேட் என்பவருடன் தகராறு ஏற்பட்டது. தகராறின்  உச்சத்தில் அடேலை சுட்டுக் கொன்று விட்டார்.

தொடர்ந்து நடந்த விசாரணையில் 2014-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்த தண்டனை சவுதிஅரேபியாவின் நியாயமான நீதிவிசாரணை முறையை வெளிக்காட்டுகிறது என்று மரண தண்டனை நிறைவற்றப்பட்ட இளவரசர் சவுத் அல் கபீரின் மாமா அப்துல் ரஹ்மான் அல் பலாஜ்  தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.