மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சிரியாவில் விமானத் தாக்குதலில்  பள்ளிக் குழந்தைகள் உட்பட 22 பேர் பலி

சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் உள்ள ஹாஸ் கிராமத்தின் மீது இன்று காலை நடைபெற்ற வான் வழித்  தாக்குதலுக்கு, 7 பள்ளிக் குழந்தைகள் உட்பட 22 பேர் பலியாகினர்.

News image
Updated On :26 அக்டோபர் 2016, 3:45 pm

DIN

பெய்ரூட்: சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் உள்ள ஹாஸ் கிராமத்தின் மீது இன்று காலை நடைபெற்ற வான் வழித்  தாக்குதலுக்கு 7 பள்ளிக் குழந்தைகள் உட்பட 22 பேர் பலியாகினர்.

சிரிய அதிபர் ஆசாத் தலைமையிலான அரசு படைகள் மற்றும் ரஷியாவின் படைகள் இணைந்து அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு  எதிரான தொடர் வான்வழி  தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள இட்லிப் மாகாணத்திலும் கடந்த சில தினங்களாக தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.

அந்த வகையில் இட்லிப் மாகாணத்தின் ஹாஸ் கிராமத்தின் மீது இன்று காலை 11.30 மணி அளவில் நடைபெற்ற விமானத் தாக்குதலில்  7 பள்ளிக் குழந்தைகள் உட்பட 22 பேர் பலியாகினர். இந்தத் தாக்குதலை நடத்தியது ரஷிய படைகளா? இல்லை சிரிய படைகளா? என்பது இப்போதுவரை உறுதியாகத் தெரியவில்லை.

தாக்குதல் தொடங்கியதும் பாதுகாப்பாக மாணவர்கள் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றபோது ராக்கெட் குண்டு ஒன்று பள்ளி மீது வீசப்பட்டதில், மாணவர்கள் பலியாகி உள்ளனர்.  காலை 11.30 மணியளவில் தொடங்கிய இந்த விமான தாக்குதல் தொடர்ந்து ஆறு முறை நடைபெற்றதாக அங்குள்ள மனித உரிமை கண்காணிப்பகம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.