மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஆப்பிள் ஐபோன்-7 வாங்குவதற்காக பெயரையே  மாற்றிய இளைஞர்!

ஐபோன்- 7 என்று தன் பெயரை மாற்றிக் கொண்டால், ஐபோன் - 7 ஒன்று இலவசமாக கிடைக்கும் என்பதால், இளைஞர் ஒருவர் தனது பெயரையே மாற்றிக் கொண்ட வினோதம் உக்ரைன் நாட்டில் நடந்துள்ளது.

News image
Updated On :31 அக்டோபர் 2016, 11:03 am

கீவ்: ஐபோன்- 7 என்று தன் பெயரை மாற்றிக் கொண்டால், ஐபோன் - 7 ஒன்று இலவசமாக கிடைக்கும் என்பதால், இளைஞர் ஒருவர் தனது பெயரையே மாற்றிக் கொண்ட வினோதம் உக்ரைன் நாட்டில் நடந்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் தனது புதிய மாடலான ஐ போன் 7-ஐ சந்தையில் அறிமுகப்படுத்தியது. இந்த  போனின் விளம்பரதிற்காக பல்வேறு யுக்திகள்  கையாளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் உக்ரைன் நாட்டில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனையகம் ஒன்று, தனது பெயரை 'ஐ போன் 7' என அதிகாரப்பூர்வமாக மாற்றிக் கொள்ளும் முதல் ஐந்து நபர்களுக்கு, ஐ போன் 7 இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தது. 

தனக்கு விருப்பமான ஐ போன் 7-ஐ இலவசமாக பெறுவதற்காக, ஒலெக்ஸ்சாண்டர் டுரின் என்ற 20 வயதான உக்ரைன் நாட்டு இளைஞர் ஒருவர், தனது பெயரை அதிகாரப்பூர்வமாக 'ஐ போன் 7' என மாற்ற முன்வந்தார். அதன்படி தன்னுடைய பெயரை ஐபோன் சிம் (உக்ரைன் மொழியில் ஏழு) என்று மாற்றியும் விட்டார்.

அதனைத் தொடர்ந்து அந்த எலெக்ட்ரானிக் பொருட்கள் விற்பனையகம் கூறியிருந்தபடி புது ஐ போன் 7 ஒன்றை அந்த இளைஞருக்கு பரிசாக அளித்துள்ளது.

புதிய போனை  பெற்றுக் கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அந்த இளைஞர், ' என் பெயரை தற்காலிகமாக மட்டுமே மாற்றிக் கொண்டுள்ளேன். திருமணமாகி குழந்தைகள் பிறந்தவுடன், மீண்டும் பழைய பெயருக்கு மாறி விடுவேன்' என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.