வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

இங்கிலாந்து இளம்பெண் கொலை வழக்கு: இரண்டு இந்தியர்கள் விடுதலை!

இந்தியாவுக்கு சுற்றுலா வந்த இங்கிலாந்து இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கிலிருந்து இரண்டு இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

News image
Updated On :25 ஜனவரி 2024, 4:38 am

DIN

இந்தியாவுக்கு சுற்றுலா வந்த இங்கிலாந்து இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கிலிருந்து இரண்டு இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தை சேர்ந்தவர் பியோனா மெக்கியூவன். இவர் 2008-ஆம் ஆண்டு தனது மூன்று பெண்களுடன் ஆறுமாத விடுமுறை சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு வந்தார். இந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றான கோவாவுக்கு வந்த இவர், அங்கு சில நாட்கள் தங்கியிருந்தார். தனது பெண்களுடன் அங்கிருந்து கர்நாடகாவுக்கு அவர் சிறு பயணம் சென்றிருந்தார். மற்றவர்கள் அங்கே தங்கிவிட, அவரது மூத்தமகள்  ஸ்கார்லெட் கீலிங் மட்டும், ஒரு விருந்தில் கலந்து கொள்ளும் பொருட்டு  கோவாவுக்கு திரும்பி விட்டார்.

ஆனால் அப்போது 15 வய தே நிரம்பிய ஸ்கார்லெட் 18.02.2008 அன்று , கோவாவின் புகழ்பெற்ற  அஞ்சுனா கடற்கரையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவருக்கு அளவுக்கு அதிகமான போதை மருந்துகளை  கொடுத்து, கற்பழித்து கொலை செய்ததாக, சாம்சன் டிசவுசா (36) மற்றும் பிளாசிடோ கார்வால்ஹோ (47) ஆகிய இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால் ஸ்கார்லெட் போதையில் தடுமாறி நீரில்மூழ்கி இறந்து விட்டதாக, இவர்கள் இருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்தனர்.

பலத்த தாமதத்திற்கு பின், ஸ்கர்க்லேட்டின் உடல் மறு  பிரேதப்பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்ற அவரது தாயார் பியோனாவின் வற்புறுத்தலுக்குப் பிறகு, நிகழ்ந்த ஆய்வில் அவர் கற்பழிக்கப்பட்டிருப்பதும், தாக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. பின்னர் 2010-ஆம் ஆண்டு விசாரணை தொடங்கியது.

ஆறு ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் , இன்று காலை  தீர்ப்பு அளிக்கப்பட்டது.கோவா தலைநகர் பனாஜியில் இன்று கூடிய நீதிமன்றத்தில் , போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் டிசவுசா மற்றும் கார்வால்ஹோ ஆகிய இருவரும் விடுவிக்கப்படுவதாக நீதிபதி வந்தனா டெண்டுல்கர் சில நொடிகளில் அறிவித்தார்.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினால் அதிர்ச்சியடையவதாக தெரிவித்த பியோனா, இந்திய நீதித்துறையின் மீது நம்பிக்கை வைத்து காத்திருந்ததாகவும், ஆனால நீதிமன்றம் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் தெரிவித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்போவதாகவும் அவர் அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.