தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம் ரூ.36 லட்சத்துக்கு ஏலம்!

உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம் ஏலத்தில் 53,503 டாலருக்கு (சுமார் ரூ. 36 லட்சம்) விற்பனையாகி சாதனை படைத்தது.

News image
Updated On :5 ஏப்ரல் 2017, 5:15 am

DIN

உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம் ஏலத்தில் 53,503 டாலருக்கு (சுமார் ரூ. 36 லட்சம்) விற்பனையாகி சாதனை படைத்தது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் உள்ள நேட் சாண்டர்ஸ் ஏல விற்பனை நிறுவனத்தைச் சேர்ந்த சாம் ஹெல்லர் இது தொடர்பாகக் கூறியதாவது:
அயோவா மாகாணத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர், ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம் தொடர்பாக எழுந்த பல்வேறு சந்தேகங்களைக் கேள்விகளாக குறிப்பிட்டு ஒரு கடிதம் அனுப்பினார். அந்த ஆசிரியரின் கடிதத்துக்கு ஐன்ஸ்டீன் மிக விவரமான பதில் கடிதத்தை 1953 செப்.7-ஆம் தேதியிட்டு எழுதினார்.
பள்ளி ஆசிரியரின் கேள்விகளுக்கு, அதே வரிசையில் பதில் அளித்து, அவருடைய ஐயங்களைப் போக்கும் விதத்தில் பல பக்கங்களைக் கொண்ட கடிதம் எழுதப்பட்டிருந்தது. தன்னுடைய விஞ்ஞான கண்டுபிடிப்புகள் பற்றி யார் எந்த ஐயத்தை எழுப்பினாலும் எளிய முறையில் அவர்களுக்கு விளக்கம் அளிக்க அந்த மாபெரும் விஞ்ஞானி தயங்கவில்லை என்பதை அந்தக் கடிதம் காட்டுகிறது. அந்தப் பள்ளி ஆசிரியரின் குடும்பத்தார் பல ஆண்டுகளாக அக்கடிதத்தைப் பாதுகாத்து வைத்திருந்தனர். அதன் ஆரம்ப ஏல விற்பனை விலை 15,000 டாலராக நிர்ணயிக்கப்பட்டது. இறுதியில் 53,503 டாலருக்கு (சுமார் ரூ. 36 லட்சம்) விற்பனையானது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.