கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

தீவிரவாத குற்றங்கள்: ஈராக்கில் ஒரே நாளில் 38 பேருக்கு தூக்கு! 

தீவிரவாத குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட 38 பேருக்கு ஈராக்கில் இன்று ஒரே நாளில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:21 pm

DIN

பாக்தாத்: தீவிரவாத குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட 38 பேருக்கு ஈராக்கில் இன்று ஒரே நாளில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஈராக் நாட்டில் பல்வேறு விதமான தீவிரவாத குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் 38 பேர் குற்றவாளிகள் என அந்நாட்டு நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டனர்.  அவர்கள் அனைவரும் தெற்கு ஈராக்கின் நஸ்ரியா நகரில் உள்ள மத்திய சிறைச்சாலை ஒன்றில் அடைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களனைவருக்கும் இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 38 பேருக்கும் இன்று ஒரே நாளில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக கடந்த செப்டம்பர் 25-ந்தேதி ஒரே நாளில் 42 பேருக்கு அந்நாட்டில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் இன்றுதான் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான நபர்களுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.