பயணிகளின் வசதிக்காக கடந்த நிதியாண்டில் (2025-26) சென்னை கோட்டத்துக்குட்பட்ட ரயில் நிலையங்களில் புதிதாக 11 புதிய நடைமேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பயணிகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும், ரயில் நிலைய உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, தெற்கு ரயில்வே கோட்டம் 2025-26 நிதியாண்டில் சென்னை கோட்டத்துக்குட்பட்ட ரயில் நிலையங்களில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, பயணிகள் தண்டவாளங்களைக் கடக்கும் ஆபத்தான முறையைத் தவிா்க்க புதிய நடைமேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த நிதியாண்டில் மட்டும் 11 புதிய நடைமேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் அம்ருத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் ஒரு நடைமேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
ஆன்மிக பயணிகளின் வசதிக்காக: அதேபோல், ஆன்மிக பயணிகளின் வசதிக்காக கடந்த மாா்ச் மாதம் திருத்தணி ரயில் நிலையத்தின் 12 மீட்டா் அகலமுள்ள பிரம்மாண்டமான நடை மேம்பாலம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
அதிக அளவிலான பயணிகளைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மேம்பாலம், குறிப்பாக கூட்ட நெரிசல் அதிகம் உள்ள நேரங்களிலும் திருவிழாக் காலங்களிலும் பயணிகள் தடையின்றி பாதுகாப்பாகச் செல்ல உதவுகிறது.
மேலும், பயணிகள் நடமாட்டம் அதிகமுள்ள வாலாஜாபாத், திருமால்பூா் மற்றும் அன்வா்திகான்பேட்டை ஆகிய நிலையங்களிலும் புதிய நடைமேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரே ஆண்டில் 11 நடைமேம்பாலங்கள் அமைத்திருப்பது சென்னை கோட்டத்தின் நவீனமயமாக்கல் மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஒரு மைல் கல். வரும் காலங்களில், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் உள்ளிட்ட கூடுதல் வசதிகளுடன், மற்ற நிலையங்களிலும் நடை மேம்பாலங்கள் அமைக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ரூ.1,290 கோடி சரக்கு வருவாய்: சென்னை ரயில்வே கோட்டம் சாதனை

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ,.6.30 லட்சம் பறிமுதல்
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தங்கக் கட்டிகள், ரூ.44.87 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ரயில்வே பாதுகாப்புப் படையினா் நடவடிக்கை

மதுரை வைகை அதிவிரைவு ரயில் 4 நாள்கள் தாமதமாகச் செல்லும்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


