2018 புத்தாண்டை கோலாகலமாக வரவேற்றது நியூஸிலாந்து!

2018 புத்தாண்டு கொண்டாட்டங்கள் நியூஸிலாந்தில் கோலாகலமாக நடைபெற்றது.
2018 புத்தாண்டை கோலாகலமாக வரவேற்றது நியூஸிலாந்து!
Updated on
1 min read

2018 புத்தாண்டு முன்னிட்டு அனைத்து நாடுகளும் புது வருடத்தை வரவேற்கும் விதமாக விழாக்கோலம் கொண்டுள்ளது.

இந்நிலையில், 2018-ம் ஆண்டினை வண்ணமையமான வானவேடிக்கைகளுடன் நியூஸிலாந்து வரவேற்றுள்ளது. அங்குள்ள மக்கள் ஆரவாரமிட்டு புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டு கொண்டாடி வருகின்றனர்.

உலகில் முதலில் புத்தாண்டு பிறக்கும் இடங்களில் ஒன்றாக நியூயிலாந்து விளங்குகிறது. இதையடுத்து ஆஸ்திரேலியாவில் சற்று நேரத்தில் புத்தாண்டு பிறக்க உள்ளது.

அந்நாட்டின் சிட்னி நகரில் 2018 புது வருடத்தை வரவேற்கும் விதமாக சுமார் 1.5 மில்லியன் மக்கள் திரண்டுள்ளனர். அங்கு வானவில் மாதிரி கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com