6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மெக்ஸிகோவில் சிறைக் கைதிகளிடையே கடும் மோதல்: 28 பேர் பலி

மெக்ஸிகோ நாட்டின் குய்ரெர்ரோ மாநிலம், அகாபுல்கோ நகரில் உள்ள சிறையில் இரு தரப்பு கைதிகளுக்கிடையே ஏற்பட்ட கடும்

News image
Updated On :7 ஜூலை 2017, 3:20 am

DIN

மெக்ஸிகோ சிட்டி: மெக்ஸிகோ நாட்டின் குய்ரெர்ரோ மாநிலம், அகாபுல்கோ நகரில் உள்ள சிறையில் இரு தரப்பு கைதிகளுக்கிடையே ஏற்பட்ட கடும் மோதலில் இதுவரை 28 கைதிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சர்வதேச அளவில் போதை மருந்து விற்பனை செய்யும் கும்பல்களுக்கு சொர்க்கமாக திகழும் மெக்சிகோ நாட்டின் சிஹுவாவா மாநிலதில் அதிகளவிலான போதை மருந்து கடத்தல் கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. ஓபிலியம் எனப்படும் போதைப்பொருள் இங்கு அதிகமான அளவில் விற்பனை செய்யப்படுகிறது. மெக்சிகோ நாட்டிலேயே சட்டம் - ஒழுங்கு இந்த மாநிலத்தில் மிக மோசமான நிலையில் உள்ளது.

தெற்கு மெக்சிக்கோ மாநிலமான குய்ரெர்ரோ லாஸ் வராஸ் பகுதியில் உள்ள க்ராஸ்ஸில் சிறைச்சாலையில் 1624 கைதிகளை அடைத்து வைக்கும் வசதி கொண்டது. அதில், சுமார் 2000 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால், இங்கு சில அடிப்படை பிரச்சனைகள் கூட பெரிதாக வெடிக்கும். சிறை அதிகாரிகளும் இதை கண்டுகொள்வதில்லை. இந்நிலையில், 4 மணியளவில் சிறைக் கைதிகள் இரு தரப்பினருக்கு இடையே மோதல் வெடித்தது.

Story image

கையில் கிடைத்த பொருட்களை கொண்டு கைதிகள் எதிர்த் தரப்பினர் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தினர். இந்த மோதலில் சிக்கி 28 கைதிகள் உயிரிழந்தனர். 3 பேர் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கைதிகள் மோதலின் போது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. போதை மருந்து கடத்தல் கும்பல்களால் ஏற்படும் குற்றங்களை குறைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க உள்துறை செயலர் ஜான் கெல்லி மெக்சிகோ சிட்டி நகருக்கு வந்து, அந்நாட்டு அதிபர் பெனா நிட்டோவைச் சந்தித்துள்ள நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

நேற்று, முன்தினம் சினாலா மாநிலத்தில் இரு கும்பல்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் சிக்கி 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வன்முறை சம்பவங்களுக்கு பிறகு ஏராளமான பாதுகாப்பு போலீஸார் சிறைச்சாலையில் குவிக்கப்பட்டுள்ளனர்.  இந்த வன்முறை சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும், சிறை நடவடிக்கைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் ஆளுநர் ஹெக்டர் அஸ்டுடிலோ புளோரிஸ் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.