துருக்கி, கிரீஸ் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 2 பேர் பலி

துருக்கி, கிரீஸ் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
துருக்கி, கிரீஸ் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 2 பேர் பலி

ஏதென்ஸ்: துருக்கி, கிரீஸ் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

துருக்கி மற்றும் கிரீஸ் பகுதிகளில் விடுமுறை நாளான நேற்றிரவு உள்ளூர் நேரப்படி 1.30 மணியளவில் திடீரென xனசக்தி வாய்ந்த நிலநடுக்க ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ப்ளோமரியின் தெற்கு பகுதியில் உள்ள ஏஜியன் கடலில் சுமார் 11 கிலோமீட்டர் தூரத்தில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் இருந்த ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அந்த இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இறந்தவரின் அடையாளம் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

அதிகாலை நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், தூக்கத்தில் இருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளை நோக்கி ஒடிவந்தனர்.  

மீட்பு பணிகள் முடிக்கிவிடப்பட்டுள்ளன. தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் நிலநடுக்கத்தால் ஏராளமான பாதைகள் தூண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இடுபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த 100க்கு மேற்பட்டவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.  பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2011 ஆம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட 7.2 ரிக்டர் அளவிலான சக்தி வாயந்த நிலநடுக்கத்தால், 600க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com