பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

மூன்று முறையும் பதவிக் காலத்தை நிறைவு செய்யாத நவாஸ் ஷெரீஃப்!

பனாமா பேப்பர்ஸ் ஊழல் விவகாரத்தில், பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீஃப்பின் பதவியை பறித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதையடுத்து, தனது பதவியை நவாஸ் ஷெரீஃப் ராஜினாமா செய்தார். 

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:32 pm

DIN

பனாமா பேப்பர்ஸ் ஊழல் விவகாரத்தில், பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீஃப்பின் பதவியை பறித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதையடுத்து, தனது பதவியை நவாஸ் ஷெரீஃப் ராஜினாமா செய்தார். 

பாகிஸ்தான் பிரதமர் பதவியை முழுகாலமும் வகிக்காமல், பாதியிலேயே நவாஸ் ஷெரீஃப் பதவியை இழப்பது இது 3-ஆவது முறையாகும்.

இதற்கு முன்பு, கடந்த 1990-ஆம் ஆண்டில் முதல் முறையாக பிரதமராக பதவியேற்ற நவாஸ் ஷெரீஃப் 1993-ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அதிபர் குலாம் இஷாக் கான், நாடாளுமன்றத்தை கலைத்ததால், பாதியிலேயே ராஜிநாமா செய்தார். 

பின்னர், கடந்த 1997-ஆம் ஆண்டில் மீண்டும் பிரதமரானார். 1999-ஆம் ஆண்டில் அப்போதைய ராணுவ தலைமைத் தளபதி முஷாரஃப், ரத்தமில்லா புரட்சியின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றி, ஷெரீஃப்பை வெளியேற்றினார். 

அதைத் தொடர்ந்து, நவாஸ் தற்போது 3-ஆவது முறையாக முழுப் பதவி காலத்தையும் வகிக்காமல் பதவி விலகியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.