ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

இரண்டாவது முறையாகச் சீனாவுடன் கைகோர்க்கும் இந்தியா

இந்தியாவும் பாகிஸ்தானும் எஸ்.சி.ஓ உறுப்பினர்களாக இனைக்கபடுவார்காள் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நடைபெறவுள்ள உச்சிமாநாட்டில் அறிவிக்கப்படும் என்றும் சீன செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:39 pm

DIN

இந்தியாவும் பாகிஸ்தானும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (எஸ்.சி.ஓ) முழு உறுப்பினர்களாக இனைக்கபடுவார்காள் என்றும் அதன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு அடுத்த வாரம் நடைபெறவுள்ள அரசியல் மற்றும் பாதுகாப்பிற்கான உச்சிமாநாட்டு கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்றும் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹூ சூனிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Story image

எஸ்.சி.ஓ.வின் சாசனத்திற்கு ஆதரவளித்து இந்தியாவும் பாகிஸ்தானும் அதைப் பின் பற்றும் என நம்புவதாகவும், அண்டைய நாடுகளுடன் நல்லுறவை மேம்படுத்துவதோடு எஸ்.சி.ஓ.வின் வளர்ச்சிக்கான ஒரு புதிய உந்துதலாகவும் இது அமையும் எனவும் ஹூ தெரிவித்துள்ளார்.

ஜூன் 8-ம் தேதி கஜகஸ்தானின் தலைநகரான அஸ்தானாவில் நடைபெறவுள்ள உச்சிமாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், ரஷ்யா வெளியுறவு அமைச்சர் விளாடிமிர் புடின், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் ஆகியோர் பங்குபெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோடி மற்றும் ஷெரிப்  சந்திப்பு நடைபெறும் எனவும் கருதப்படுகிறது.

ஷாங்காயில் 1996-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தக் குழுவில் சீனா, கஜகஸ்தான், கிர்கிதான், ரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாகவுள்ளனர். இந்த எஸ்.சி.ஓ ஒரு பாதுகாப்பு அமைப்பாக மத்திய ஆசியாவில் சீனாவின் மேலாதிக்கத்தில் செயல்படுகிறது. ஆப்கானிஸ்தான், பெலாரஸ், ஈரான் மற்றும் மங்கோலியா நாடுகளுடன் இந்தியா மற்றும் பாகிஸ்தானிற்கு இப்பொழுது பார்வையாளர் நிலையே உள்ளது.

எஸ்.சி.ஓ மத்திய ஆசியாவில் பயங்கரவாதத்தை எதிர்ப்பதிலும், குறிப்பாகச் சீனாவின் உகூர் முஸ்லீம் மாகாணமான சிஞியாங்கின் எல்லைகளிலும் பிரிவினைவாத கிழக்கு துர்க்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கத்திற்கு எதிராகப் போராடுவதிலும் கவனம் செலுத்துகிறது.

Story image

உலகின் மிக அதிகமான மக்கள்தொகை கொண்ட முதல் இரண்டு நாடுகளான சீனா மற்றும் இந்தியாவின் கூட்டுறவு, மிகுந்த மக்கள் சக்தி கொண்ட மிகப்பெரிய ஒரு சர்வதேச குழுமம் அமைய உதவுகிறது. இந்தியாவும் சீனாவும் ஏற்கனவே ‘பிரிக்ஸ்’ (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா) கூட்டுறவின் உறுப்பினர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எஸ்.சி.ஓ முக்கியமாக இராணுவ ஒத்துழைப்பு, உளவுத்துறை பகிர்வு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மத்திய ஆசியாவில் உறுப்பு நாடுகள் பகிர்ந்து கொள்வதை உள்ளடக்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.