எல்லைக்குள் புகுந்து பயங்கரவாதிகளைத் தாக்குவோம்: பாகிஸ்தானுக்கு ஈரான் மறைமுக எச்சரிக்கை
பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து, அங்குள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நிகழ்த்துவோம் என்று ஈரான் மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.


பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து, அங்குள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நிகழ்த்துவோம் என்று ஈரான் மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஷியா பிரிவினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஈரானுக்கு எதிராக, பாகிஸ்தானின் சன்னி பிரிவு பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர். அண்மையில், பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் 10 ஈரான் ராணுவ வீரர்களை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் படுகொலை செய்தனர். இதையடுத்து, எல்லையில் கண்காணிப்பை மேம்படுத்த இரு நாடுகளும் உடன்பாடு செய்து கொண்டன.
எனினும், ஈரான் ராணுவ தலைமைத் தளபதி முகமது ஹுசைன் பக்கீரி தொலைக்காட்சியில் தெரிவித்ததாவது:
பயங்கரவாதிகள் மீது ஈரான் படையினர் தாக்குதல் நடத்துவார்கள். பயங்கரவாதிகள் எந்த இடத்தில் இருந்தாலும், அந்த இடத்துக்கே சென்று எங்கள் வீரர்கள் தாக்குதல் நிகழ்த்துவார்கள் என்று அவர் கூறினார். பாகிஸ்தானுக்குள் நுழைந்து, அங்குள்ள பயங்கரவாத நிலைகள் மீது தாக்குதல் நிகழ்த்துவதையே அவர் சூசகமாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...