வங்க தேசத்தை தாக்கியது மோரா புயல்: 3 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பு
வங்க கடலில் உருவான மோரா புயல் வங்கதேச கடற்கரையை தாக்கியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தாகா: வங்க கடலில் உருவான மோரா புயல் வங்கதேச கடற்கரையை தாக்கியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சக்தி வாய்ந்த இந்தப் புயலால் நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. 117 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியதையடுத்து, அப்பகுதியில் உள்ள 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், பள்ளி மற்றும் அரசு அலுவலகங்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பல்லாயிரக் கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் சேதமடைந்துள்ளது. மோரா புயல் காரணமாகப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அப்பகுதியில் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...