ஓடும் ரயிலில் பாம்பு: வெறும் கைகளால் அடித்துக் கொன்ற இந்தோனேசிய வாலிபர்!
இந்தோனேசியாவில் ஓடும் பயணிகள் ரயில் ஒன்றில் தென்பட்ட பாம்பு ஒன்றினை, வாலிபர் ஒருவர் வெறும் கைகளால் அடித்துக் கொன்ற விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.


ஜகார்தா: இந்தோனேசியாவில் ஓடும் பயணிகள் ரயில் ஒன்றில் தென்பட்ட பாம்பு ஒன்றினை, வாலிபர் ஒருவர் வெறும் கைகளால் அடித்துக் கொன்ற விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இந்தோனேசியாவில் பயணிகள் ரயில் ஒன்றின் பெட்டியில் பயணத்தின் பொழுது சாமான்கள் வைக்கும் இடத்தில் பாம்பு ஒன்று நெளிந்து கொண்டிருப்பதைக் கண்டு பயணிகளை அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதன் காரணமாக அந்த ரயில் அவசரமாக நிறுத்தப்பட்டது.
காவலர்கள் உதவிக்கு வந்த நிலையில், பயணிகளில் கண்ணாடி அணிந்திருந்த இளைஞர் ஒருவர் கொஞ்சமும் பயப்படாமல் வெறும் கைகளால் பாம்பினை வாலைப் பிடித்து இழுத்தார். பின்னர் பாம்பு வந்தவுடன் அதனை அப்படியே தரையில் ஓங்கி அடித்தார். ஒரே அடியில் பாம்பு இறந்தது.
அப்பொழுது பயணி ஒருவர் எடுத்த விடியோவானது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
விடியோ:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...