டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

லண்டன் சுரங்க ரெயிலில் குண்டு வெடிப்பு! 

இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் அமைந்துள்ள சுரங்க ரெயில் நிலையம் ஒன்றில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக தகவல்  வெளியாகி உள்ளது. 

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:53 pm

DIN

லண்டன்: இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் அமைந்துள்ள சுரங்க ரெயில் நிலையம் ஒன்றில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக தகவல்  வெளியாகி உள்ளது. 

இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் போக்குவரத்திற்கு சுரங்க ரயில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 8.20 மணி அளவில் மேற்கு லண்டனின் பார்சன்ஸ் கிரீன்ஸ் ரெயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குண்டு வெடித்ததில் நிலையத்தில் தீ பிடித்ததால் தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ள பயணிகள்  பயந்து ஓடியுள்ளனர். பல பயணிகள் காயம் அடைந்து உள்ளனர் எனவும் முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. குண்டு வெடிப்பின் காரணமாக பலருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது என லண்டனின் மெட்ரோ பத்திரிக்கை செய்தி வெளியிட்டு உள்ளது. 

அதேபோல குறிப்பிட்ட ரெயில் நிலையத்திற்கு வெளியே போலீசார் நிற்கும் புகைப்படங்களும் இணையதளங்களில் வெளியாகி உள்ளது.  முதலுதவிக்காக மருத்துவ உதவியாளர்கள் அங்கு பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர் எனவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக பார்சன்ஸ் கிரீன்ஸ் ரயில் நிலையம் வழியிலான ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.