மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கிலோ 300 ரூபாய் ஆனாலும் சரி; இந்தியாவில் இருந்து தக்காளி வேண்டாம்: பாகிஸ்தான் உறுதி

காய்கறி சந்தைகளில் கிலோ தக்காளி அதிகபட்சமாக 300 ரூபாய்க்கு விற்கப்பட்டாலும், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படாது என்று பாகிஸ்தான் உறுதியாகக் கூறிவிட்டது.

News image
Updated On :27 செப்டம்பர் 2017, 7:20 am


இஸ்லாமாபாத்: காய்கறி சந்தைகளில் கிலோ தக்காளி அதிகபட்சமாக 300 ரூபாய்க்கு விற்கப்பட்டாலும், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படாது என்று பாகிஸ்தான் உறுதியாகக் கூறிவிட்டது.

ஆண்டு தோறும் பாகிஸ்தானில் ஏற்படும் தக்காளிப் பற்றாக்குறையை, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதன் மூலம் சரிகட்டிவந்தது பாகிஸ்தான். ஆனால், தற்போது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு சுமூகமாக இல்லாததால், இந்தியாவில் இருந்து செல்லும் தக்காளி கண்டெய்னர் லாரிகளை அந்நாட்டு எல்லைக்குள் நுழைய பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானில் தக்காளி உற்பத்தி குறைந்திருப்பதால் ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடு காரணமாக, ஒரு கிலோ தக்காளி ரூ.120 முதல் ரூ.300 வரை விற்கப்படுகிறது. கடும் தட்டுப்பாடு நிலவினாலும், இந்தியாவில் இருந்து தக்காளியை இறக்குமதி செய்யப்போவதில்லை என்று பாகிஸ்தான் திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.

இதனால், பலுசிஸ்தானில் விளையும் தக்காளி, காய்கறி சந்தைக்கு வரும் வரை வியாபாரிகளும், பொதுமக்களும் காத்திருக்க வேண்டும் என்று அந்நாட்டு உணவுத் துறை அமைச்சர் கூறினார்.

பாகிஸ்தானில் தக்காளி விலை அதிரடியாக உயர்ந்திருப்பது சமூக வலைத்தளங்களிலும் எதிரொலிக்கிறது. தக்காளியை புறக்கணிப்போம் என்பது போன்ற வாசகங்கள் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.