ஜெர்மனியில் ராணுவத்தில் பணிபுரியும் வீராங்கனைகள் கர்ப்ப காலத்தில் இறுக்கமான உடைகளை அணிவதில் சிரமம் உள்ளதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சோதனை அடிப்படையில் கர்ப்பிணிகளான 80 வீராங்கனைகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சீருடைகள் வழங்கப்பட்டது.
அது திருப்திகரமாக இருக்கவே மேலும் 500-க்கும் மேற்பட்ட புதிய சீருடைகளை தயாரித்து வழங்க முடிவு செய்துள்ளது ஜெர்மனி ராணுவம். தற்போது ஜெர்மனி ராணுவத்தில் 20,000-ம் மேற்பட்ட வீராங்கனைகள் பணிபுரிகிறார்கள். அவர்களுள் 2 சதவிகிதத்தினர் கர்ப்பவதிகளாக உள்ள நிலையில் அவர்களுக்கான சீருடையில் மாற்றம் தேவைப்பட்டது.

ஜெர்மனி ராணுவத்தில் ஏராளமான பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் சராசரியாக 2 சதவிகிதம் பேர் கர்ப்பிணிகளாக இருப்பதாகக் கூறியுள்ள ஜெர்மனி ராணுவம், ஏற்கெனவே சோதனை அடிப்படையில் கர்ப்பிணி வீராங்கனைகளுக்கான பிரத்யேக சீருடைகளை வழங்கியது. அந்த சீருடைகள் திருப்திகரமாக இருப்பதாக பயன்படுத்தியவர்கள் தெரிவித்ததை அடுத்து, முதற்கட்டமாக 500 சீருடைகளை வாங்க முடிவு செய்துள்ளதாக ஜெர்மனி ராணுவம் கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உ.பி.யில் தனியார் நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் வன்முறை
சட்டப்பேரவைத் தேர்தல்! டாஸ்மாக் கடைகளுக்கு எத்தனை நாள்கள் விடுமுறை?

”பாட்ட அமத்துங்க!” பிரசாரத்திற்கு நடுவே நுழைந்த தவெக ஆட்டோவை கண்டித்த திலகபாமா!
விரைவில் வெளியாகும் ஏழுகடல் ஏழுமலை!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


