அயர்லாந்து எல்லை விவகாரத்துக்கு தீர்வு காணாவிட்டால், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான ஒப்பந்தம் நிறைவேறாது என்று அந்த ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்காக கடந்த 2016-ஆம் ஆண்டு உள்நாட்டில் 'பிரெக்சிட்' என்ற பெயரில் பிரிட்டன் நடத்திய கருத்துக்கணிப்பு வெற்றி பெற்றது. இதையடுத்து, வருகின்ற 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், பிரிட்டனில் உள்ள வடக்கு அயர்லாந்து மாகாணத்துக்கும், அயர்லாந்து நாட்டுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம்பெற்றுள்ள உறுப்பு நாடுகள், தங்களுக்கு இடையே நடைபெறும் எல்லைவழி வர்த்தகத்துக்கு சுங்கச்சாவடி அமைக்கக்கூடாது, பிற உறுப்பு நாடுகளின் மக்களை கடவுச்சீட்டு இல்லாமல் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.
தற்போது பிரிட்டனும், அயர்லாந்தும், ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடுகளாக உள்ள போதிலும் எல்லைவழி வர்த்தகம், கடவுச்சீட்டு இல்லா பயணம் உள்ளிட்ட விவகாரங்களில் பிரிட்டன் அவ்வபோது பிரச்னை செய்து வருகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகும் பட்சத்தில் இந்த சிக்கல் மேலும் அதிகரிக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆகவே, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறினாலும் வடக்கு அயர்லாந்து மாகாணம் மட்டும் ஒன்றியத்தில் நீடித்திருக்கலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது. அந்த யோசனையையும் பிரிட்டன் நிராகரித்தது.
இந்நிலையில், பிரிட்டன் நாடாளுமன்றத்தில், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் சார்பாக டொனால்ட் டஸ்க் சார்பில் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், '' பிரிட்டன் எடுத்துள்ள 'பிரெக்சிட்' முடிவு காரணமாக எழுந்துள்ள பிரச்னைக்கு அந்நாட்டு அரசே தீர்வு காண வேண்டும். எந்தத் தீர்வும் ஏற்படுத்தப்படவில்லை என்றால் விடுதலை அளிக்கும் ஒப்பந்தம் நிறைவேறாது'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடவுள்களின் ஆடுகளம்... செயலிழந்த எரிமலை உச்சியில் அமைக்கப்பட்டுள்ள கால்பந்து திடல்!

கருப்பு திரைப்படத்தில் நடித்தது ஏன்? இந்திரன்ஸ் விளக்கம்!
ஆலங்குளம் அருகே 6 பேருக்கு அரிவாள் வெட்டு: மார்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |


