அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

வடகொரியாவுடன் அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தை: டிரம்ப்

வடகொரியாவுடன் அமெரிக்கா நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் கூறினார்.

News image
Updated On :19 ஏப்ரல் 2018, 1:05 am IST

வடகொரியாவுடன் அமெரிக்கா நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் கூறினார். அதற்காக, அந்நாட்டு உயர்நிலை அதிகாரிகளுடன் பேசி வருவதாகவும் அவர் கூறினார்.
அமெரிக்கா வந்துள்ள ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபேவை, புளோரிடாவில் உள்ள தனது மாளிகையில் டிரம்ப் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு டிரம்ப் பேசியதாவது:
அமெரிக்கா-வடகொரியா இடையாயன உச்சி மாநாடு, வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது. இதில், வடகொரியாவுடன் அமெரிக்கா நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. அமெரிக்காவுக்கு வெளியேதான் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது. இதற்காக, 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. வடகொரிய உயர் நிலை அதிகாரிகளுடன் பேசத் தொடங்கி விட்டோம். ஆனால், மாநாடு நடைபெறவுள்ள இடம் இன்னும் இறுதிசெய்யப்படவில்லை.
கிம் ஜோங் உன்னுடனான சந்திப்பை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன். இந்த மாநாட்டின் மூலம் நல்ல விஷயங்கள் நடைபெறும் என்று நம்புகிறேன். இந்த மாநாடு நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்புகிறேன். 
வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஆக்கப்பூர்வமாக பங்காற்றிய சீன அதிபர் ஷீ ஜின் பிங்குக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.
அவரைத் தொடர்ந்து, ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபே பேசியதாவது:
அமெரிக்காவுடனான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், வடகொரியா பிரச்னை குறித்தும் டிரம்ப்புடன் நீண்ட நேரம் விவாதித்தேன்.
வடகொரியா-தென்கொரியா இடையே விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. வடகொரியாவுக்கு டிரம்ப் கொடுத்த அழுத்தம் காரணமாகவே, இந்தப் பேச்சுவார்த்தை சாத்தியமாகவுள்ளது. மேலும், தென்கொரியாவில் உள்ள பியான்சங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளதால், வடகொரியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 
உண்மையில், அமெரிக்கா தனது ராணுவ வலிமையைக் கொண்டு வடகொரியாவை சம்மதிக்க வைத்துள்ளது என்றார் ஷின்úஸா அபே.
60 ஆண்டு விரோதம்: 1950-களில் வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே போர் மூண்டது.
இந்தப் போரில், வடகொரியாவுக்கு ஆதரவாக ரஷியாவும், தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களமிறங்கியதால் போர் மேலும் தீவிரமடைந்தது. அந்தப் போரில் இரு நாடுகளும் வெற்றி பெறவில்லை.
தென்கொரியாவுக்கு ஆதரவாகக் களமிறங்கிய அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே போர் முடிந்து 60 ஆண்டுகளைக் கடந்த பிறகும் நல்லுறவு நீடிக்கவில்லை. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பை வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பல்வேறு தருணங்களில் விமர்சித்து வந்தார். இந்த நிலையில், அணுசக்தி திட்டம் தொடர்பாக, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக தென்கொரியா மூலம் வடகொரிய அரசு கடந்த மாதம் அழைப்பு விடுத்தது. அந்த அழைப்பை டிரம்ப் உடனடியாக ஏற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக, 2 வாரங்களுக்கு முன் அமெரிக்கா பதிலளித்ததது. இந்த நிலையில், இரு நாடுகளுக்கு இடையே உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.
வடகொரியா பயணம்: இதனிடையே, இந்த மாநாட்டை முன்னிட்டு, அமெரிக்காவின் சிஐஏ இயக்குநர் மைக் பாம்பியோ, வடகொரியாவுக்குச் சென்று, அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன்னை சந்தித்துப் பேசியுள்ளார். இந்தத் தகவலை, டிரம்ப்பும் உறுதிப்படுத்தியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.