
லண்டன்: இங்கிலாந்து குடியேற்ற விதிகளில் முறைகேடு செய்து பலருக்கும் அனுமதி வழங்கியதாக எழுந்த புகாரினைத் தொடர்ந்து இங்கிலாந்து உள்துறை அமைச்சர் ஆம்பர் ரூட் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
இங்கிலாந்தின் பிரதமராக பதவி வகித்து வருபவர் தெரசா மே. இவரது அமைச்சரவையில் உள்துறை மந்திரியாக இருந்து வருபவர் ஆம்பர் ரூட். குடியேற்றத் துறையானது உள்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.
இந்நிலையில் இங்கிலாந்தில் வசிப்பதற்கு குடியுரிமை அளித்தது தொடர்பான பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது என எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தனர். அத்துடன் சட்ட விரோதமான முறையில் பலருக்கும் அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறி வந்தனர்.
இந்நிலையில் இங்கிலாந்து குடியேற்ற விதிகளில் முறைகேடு புகாரினைத் தொடர்ந்து இங்கிலாந்து உள்துறை அமைச்சர் ஆம்பர் ரூட் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
இது தொடர்பாக ஆம்பர் ரூட் பிரதமர் தெரசா மேவுக்கு தனது ராஜிநாமா கடிததத்தினை அனுப்பியிருந்தார். ஆம்பர் ரூட்டின் ராஜிநாமா கடிதம் ஏற்கப்பட்டதாக பிரதமர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.