பெப்ஸி கோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) பொறுப்பில் இருந்து இந்தியாவைச் சேர்ந்த இந்திரா நூயி (62) விலக இருக்கிறார். சுமார் 12 ஆண்டுகளாக அவர் இப்பொறுப்பில் இருந்தார்.
புதிய தலைமைச் செயல் அதிகாரியாக ரமோன் லகுவார்ட் (54) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உலகின் இரண்டாவது பெரிய உணவு மற்றும் குளிர்பான தயாரிப்பு நிறுவனமான பெப்ஸி கோ நிறுவனத்தில் இந்திரா நூயி 24 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். வரும் அக்டோபர் 3-ஆம் தேதி அவர் தலைமைச் செயல் அதிகாரி பதவியில் இருந்து விலகுகிறார். அன்றைய தினமே ரமோன் அப்பொறுப்பை ஏற்க இருக்கிறார். அடுத்த ஆண்டு தொடக்கம் வரை நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இந்திரா நூயி தொடர்வார்.
இது தொடர்பாக இந்திரா நூயி வெளியிட்டுள்ள சுட்டுரை பதிவில், எனது வாழ்க்கையில் 24 ஆண்டுகளை பெப்ஸி கோ நிறுவனத்துடன் பயணித்துள்ளேன். இதுபோன்ற மிகப்பெரிய நிறுவனத்தை இத்தனை ஆண்டுகள் வழி நடத்தும் பொறுப்பு எனக்கு கிடைக்கும் என்று நான் நினைத்தது இல்லை. நிறுவனத்துக்கான எனது சிறப்பான பணிகளை எண்ணி பெருமை கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்தவரான இந்திரா நூயி, சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் படித்தவர். அமெரிக்காவில் பணியில் சேர்ந்த பிறகு அந்நாட்டு குடியுரிமை பெற்று, அங்கேயே வசித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


