சாலையில் ஓடிய சாக்லேட் ஆறு: ஜெர்மனியில் நடந்த விநோதம் (விடியோ இணைப்பு)

சாலையில் ஓடிய சாக்லேட் ஆறு: ஜெர்மனியில் நடந்த விநோதம் (விடியோ இணைப்பு)

ஜெர்மனியின் வெஸ்டோனேன் நகரில் உள்ள சாக்லேட் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக  சாலையில் சாக்லேட் ஆறாக ஓடிய விநோதம் நடந்துள்ளது. 
Published on

வெஸ்டோனேன் (ஜெர்மனி): ஜெர்மனியின் வெஸ்டோனேன் நகரில் உள்ள சாக்லேட் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக  சாலையில் சாக்லேட் ஆறாக ஓடிய விநோதம் நடந்துள்ளது. 

ஜெர்மனியின் வெஸ்டோனேன் நகரில் ட்ரெய்மெய்ஸ்டெர் என்னும் சாக்லேட் உற்பத்தி தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் கிறிஸ்துமஸை முன்னிட்டு அதிக அளவில் சாக்லேட் உற்பத்தி செய்யும் பணி நடந்து வந்தது. 

இந்நிலையில் திங்கள் இரவு தொழிற்சாலையில் அமைந்துள்ள சேமிப்புக் கலனொன்றில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறின் காரணமாக அங்கு சேமிக்கப்பட்டிருந்த 900 கிலோ எடையுள்ள சாக்லேட் குழம்பு நிரம்பி வழியத் துவங்கியது. 

பின்னர் தொழிற்சாலை வாயிலைத் தாண்டி அருகில் இருந்த சாலையின் நடைபாதையில் அந்த குழம்பு வழிந்து தரையில் இறுகத் துவங்கியது.  இதன் காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து தடைபட்டது. 

இதன் காரணமாக 25 தீயணைப்பு வீரர்கள் அடங்கிய குழுவானது விரைந்து வந்து சாக்லேட் குழம்பை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். கொதிக்கும் நீரை ஊற்றியும், அதெற்கென ஒரு சிறப்பு படையினரும் வந்து இந்த சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். 

சிலமணி நேர போராட்டத்திற்குப் பிறகு போக்குவரத்து சீரானது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com