டோக்கியோ: ஜப்பானின் சப்போரா நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் ஞாயிறு இரவு ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 42 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஜப்பானின் சப்போரோ நகரில் பிரபல உணவு விடுதி ஒன்று உள்ளது. அந்த விடுதியில் ஞாயிறு இரவு திடீர் என வெடி விபத்து ஏற்பட்டது. அதனால் உண்டான் அதிர்வின் காரணமாக அருகில் இருந்த ஒரு கட்டிடமும் இடிந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெடிவிபத்து குறித்த தகவலறிந்து, 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை கடுமையாகப் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இரண்டு பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாங்க சப்போரோ நகர தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
வெடி விபத்துக்கான காரணம் எதுவும் உடனடியாக தெரியாத நிலையில், சப்போரோ நகர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரு நடைமேடை வியாபாரிகள் பலி! காய்கறி விற்பவர்கள் வளாகத்தைத் தொடக் கூடாது: கார்கே

மதுரை வந்தடைந்த கள்ளழகர்! பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பூந்தொட்டியில் மறைந்திருந்த பாம்பு! பத்திரமாக மீட்பு! | CBE
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


