குழந்தைகள், முதியோரிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஆக. 30 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீன அதிபா் - பிரதமா் மோடி சந்திக்க வாய்ப்புதிருவண்ணாமலை கோயிலில் செப்.1 முதல் கைப்பேசிக்குத் தடை

இலங்கை நாடாளுமன்றத்தில் இரு எதிர்க்கட்சித் தலைவர்கள்: புதிய சர்ச்சை

இலங்கை நாடாளுமன்றத்தில் தற்போது மகிந்த ராஜபட்ச உள்பட இரு எதிர்க்கட்சித் தலைவர்கள் இருப்பதால் புதிதாக சர்ச்சை எழுந்துள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின்

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST


இலங்கை நாடாளுமன்றத்தில் தற்போது மகிந்த ராஜபட்ச உள்பட இரு எதிர்க்கட்சித் தலைவர்கள் இருப்பதால் புதிதாக சர்ச்சை எழுந்துள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஆர். சம்பந்தன் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகிக்கும் தன்னை அப்பொறுப்பிலிருந்து நீக்காமலேயே, ராஜபட்சவை எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரித்து நாடாளுமன்றத் தலைவர் கரு. ஜெயசூரியா அறிவிப்பு வெளியிட்டதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்றும் சம்பந்தன் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், தற்போது நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் இருவர் அங்கம் வகிப்பதாகத் தெரிகிறது. இலங்கை அரசியலில் ஏற்கெனவே குழப்பம் ஏற்பட்ட சூழலில், இது அந்தச் சூழலை மேலும் சிக்கலாக்கியுள்ளது. ராஜபட்ச எந்தக் கட்சியிலிருந்து எம்.பி. ஆனாரோ, தற்போது அந்தக் கட்சியிலிருந்து விலகியுள்ளார். 
எனவே, அவர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் அந்தஸ்தை இழந்துவிட்டார். நாடாளுமன்றத் தலைவர் கரு ஜெயசூரியா அவசரத்தில் மேற்கொண்ட முடிவானது, அரசமைப்பை மீறியதாக உள்ளது என்றார். 
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க தேர்வுக் குழு ஒன்றை நியமிப்பது தொடர்பாக தாம் விரைவில் அறிவிப்பு வெளியிடுவதாக கரு ஜெயசூரியா கூறியுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பானது மொத்தம் 16 எம்.பி.க்களுடன், இலங்கை நாடாளுமன்றத்தில் 2-ஆவது பெரிய அணியாக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.