
பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்களை அறிந்துகொள்ள பிற நிறுவனங்களுக்கு முகநூல் அனுமதி வழங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகின.
இதுதொடர்பாக நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
முகநூல் பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்களை அறிந்துகொள்ள நெட்ஃபிளிக்ஸ், ஸ்பாடிஃபை ஆகிய நிறுவனங்களுக்கு முகநூல் அனுமதி அளித்துள்ளது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தேடுபொறியான பிங், முகநூல் பயனாளிகளின் தகவல்களை அறிந்துகொள்கிறது.
அழைப்பு எண், நண்பர்களுடன் பகிர்ந்துகொண்ட குறுந்தகவல்கள் ஆகியவற்றையும் இந்த நிறுவனங்கள் அறிந்துகொள்கின்றன.
முகநூல் பயனாளிகளின் தகவல்கள் கேம்ரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
இதை முகநூல் நிறுவனமும் ஒப்புக் கொண்டது. தனது பயனாளிகளின் தகவல்களை அறிந்துகொள்ள சுமார் 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு முகநூல் அனுமதி வழங்கியுள்ளது.
பயனாளிகளின் அனுமதி பெறாமல் அவர்களின் தகவல்களை வேறு யாருக்கும் அளிக்கக் கூடாது என்ற வர்த்தக கூட்டமைப்பு ஆணையத்தின் ஒப்பந்தத்தில் முகநூல் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.
முகநூல் முன்னாள் ஊழியர்களிடம் எடுக்கப்பட்ட பேட்டிகளில் சில நிறுவனங்களுக்கு பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்களை அறிந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





