ஐ.எஸ். விவகாரம்: அமெரிக்கா மீது துருக்கி புகார்

சிரியாவில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளை அமெரிக்கா வேண்டுமென்றே சில இடங்களில் விட்டு வைத்திருப்பதாக துருக்கி புகார் தெரிவித்துள்ளது.
சிரியா குர்து படையினருடன் அமெரிக்க ராணுவத்தினர் (கோப்புப் படம்).
சிரியா குர்து படையினருடன் அமெரிக்க ராணுவத்தினர் (கோப்புப் படம்).
Updated on
1 min read

சிரியாவில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளை அமெரிக்கா வேண்டுமென்றே சில இடங்களில் விட்டு வைத்திருப்பதாக துருக்கி புகார் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மேவ்லுட் காவுசோக்லு கூறியதாவது:
சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது முழுமையான தாக்குதல் நடத்தாமல் ஆங்காங்கே சிறிய பகுதிகளில் அவர்களை அமெரிக்கா வேண்டுமென்றே விட்டு வைத்துள்ளது.
அப்போதுதான், சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையைத் தொடர்ந்து மேற்கொள்ளவும், அதற்காக சிரியா குர்துகளுடன் ஒத்துழைப்பை மேற்கொள்ளவும் முடியும் என அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கான போரில் இது மிகவும் முக்கியமான கட்டம் ஆகும். இந்த நேரத்தில் அமெரிக்கா முழு வீச்சுடன் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
துருக்கியில் பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வரும் குர்து அமைப்பினருக்கு, சிரியாவிலுள்ள குர்துப் படையினர் ஆதரவளிப்பதாக துருக்கி குற்றம் சாட்டி வருகிறது. இதையடுத்து, அந்தப் படையினர் மீது துருக்கி தீவிர தாக்குதல் நிகழ்த்தி வருகிறது.
எனினும், துருக்கியுடன் நேட்டோ அமைப்பில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா, ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் சிரியா குர்து படையினருக்கு உதவியளித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com