மூன்றாவது திருமணம் செய்துகொண்ட 65 வயது இம்ரான் கான்! (படங்கள்)
கடந்த வருடம் ஆன்மிக ஆலோசனைகளுக்காக புஸ்ராவைச் சந்தித்த இம்ரான் கான், பிறகு அவரைக் காதலிக்கத் தொடங்கினார்...


பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சித் தலைவருமான இம்ரான் கான் மூன்றாவது முறையாகத் திருமணம் செய்துள்ளார்.
பிபிசி தொலைக்காட்சியில் வானிலை அறிவிப்பாளராகப் பணியாற்றியுள்ள ரெஹம் கானுக்கும், இம்ரான் கானுக்கும் 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு பாகிஸ்தான் அரசியலில் ரெஹம் கானின் தலையீடு இருக்கும் என அப்போதே பரவலாகக் கருதப்பட்டது. இந்த நிலையில், பத்து மாதங்கள் கழித்து ரெஹம் கானை விவகாரத்து செய்தார் இம்ரான் கான். 43 வயதான ரெஹம் கானும், மருத்துவர் ஒருவரை திருமணம் செய்து விவாகரத்துப் பெற்றவர். அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இம்ரான் கான் - ரெஹம் கான்
65 வயதான இம்ரான் கானுக்கு முதல்முறையாக, ஜெமீமா கோல்ட்ஸ்மித் என்பவருடன் கடந்த 1995-ம் ஆண்டு திருமணமாகி, இரண்டு மகன்கள் உள்ளனர். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இம்ரான்-ஜெமீமா இடையே விவாகரத்து ஆனதைத் தொடர்ந்து மகன்கள் இருவரும் தாயுடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் தனது ஆன்மிக ஆலோசகரான புஸ்ரா மனேகாவைத் (பிங்கி பிர் என்றும் அழைக்கப்படுகிறார்) திருமணம் செய்துள்ளார் இம்ரான் கான். இது இம்ரானின் மூன்றாவது திருமணம். இத்தகவலை அவருடைய பிடிஐ கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்து புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது. நேற்று, லாகூரில் மனேகாவின் இல்லத்தில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் இம்ரான் கானின் சகோதரிகள் கலந்துகொள்ளவில்லை. இதையடுத்து குடும்பத்தினரின் சம்மதம் இல்லாமல் புஸ்ராவை இம்ரான் திருமணம் செய்துகொண்டுள்ளார் என்று அறியப்படுகிறது.
40களின் இறுதியில் இருக்கும் புஸ்ரா மனேகாவுக்கு முதல் திருமணம் மூலமாக 5 குழந்தைகள் உள்ளார்கள். கடந்த வருடம் ஆன்மிக ஆலோசனைகளுக்காக புஸ்ராவைச் சந்தித்த இம்ரான் கான், பிறகு அவரைக் காதலிக்கத் தொடங்கினார். இதனால் தன் கணவரை புஸ்ரா விவாகரத்து செய்ததையடுத்து தற்போது இம்ரான் - புஸ்ரா ஆகியோருக்குத் திருமணம் நடைபெற்றுள்ளது.



தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...