மான்டனீக்ரோ: அமெரிக்கத் தூதரகம் மீது தற்கொலைத் தாக்குதல்

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான மான்டனீக்ரோவில், அமெரிக்கத் தூதரகத்தைக் குறிவைத்து வியாழக்கிழமை தற்கொலைத் தாக்குதல் நடைபெற்றது இதில், தற்கொலைப் படையைச் சேர்ந்தவரைத் தவிர வேறு
தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்கத் தூதரகத்தை சுற்றி வளைத்த மான்டனீக்ரோ போலீஸார்.
தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்கத் தூதரகத்தை சுற்றி வளைத்த மான்டனீக்ரோ போலீஸார்.
Updated on
1 min read

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான மான்டனீக்ரோவில், அமெரிக்கத் தூதரகத்தைக் குறிவைத்து வியாழக்கிழமை தற்கொலைத் தாக்குதல் நடைபெற்றது இதில், தற்கொலைப் படையைச் சேர்ந்தவரைத் தவிர வேறு உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
இதுகுறித்து அதிகரிகள் கூறியதாவது:
மான்டனீக்ரோ தலைநகர் பாட்கோரிகாவிலுள்ள அமெரிக்கத் தூதரககக் கட்டடத்தின் முன்பு, அடையாளம் தெரியாக மர்ம நபர் தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டார்.
அதற்கு முன்னதாக, தூதரகத்தைக் குறி வைத்து வெடிக்கும் பொருளொன்றை அவர் வீசியெறிந்தார். அது கையெறி குண்டாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும், இந்தத் தாக்குதலுக்கான நோக்கம் குறித்து அதிகாரிகள் எந்த விவரத்தையும் வெளியிடவில்லை.
கணிசமான முஸ்லிம் மதத்தினரைக் கொண்டுள்ள மான்டனீக்ரோ நாடு, கடும் எதிர்ப்பையும் மீறி நேட்டோ அமைப்பில் அண்மையில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com