டிரம்ப்-வடகொரிய தூதர் சந்திப்பு

டிரம்ப்-வடகொரிய தூதர் சந்திப்பு

வாஷிங்டன்: வடகொரிய தூதர் கிம் யங் சோலை வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபா் டொனால்டு டிரம்ப் வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.

வாஷிங்டன்: வடகொரிய தூதர் கிம் யங் சோலை வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபா் டொனால்டு டிரம்ப் வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் அளித்த கடிதத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம், கிம் யங் சோல் ஒப்படைத்தார். அந்தக் கடிதத்தில் என்ன தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. 

ஆனால், சிங்கப்பூரில் வரும் 12-ஆம் தேதி நடைபெறவுள்ள மாநாட்டில் டிரம்பை சந்திப்பதற்கு மிகுந்த ஆர்வமாக இருப்பதாக கிம் ஜோங் உன் குறிப்பிட்டுள்ளார் என்று வால் ஸ்டீா்ட் ஜா்னல் செய்தித்தாளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 18 ஆண்டுகளுக்குப் பிறகு வட கொரிய அதிகாரி ஒருவர் அமெரிக்க அதிபரை சந்தித்துப் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com