காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

பிரெக்ஸிட் மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் (பிரெக்ஸிட்) முடிவுக்கு, அந்த நாட்டு நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 9:33 pm IST

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் (பிரெக்ஸிட்) முடிவுக்கு, அந்த நாட்டு நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியது.
பல மாத காலமாக நீடித்த விவாதங்களுக்குப் பிறகு, பிரெக்ஸிட்டுக்கு சட்ட வடிவம் கொடுக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
ஐரோப்பிய யூனியன் விலகல் மசோதா' என்ற பெயரிடப்பட்ட அந்த மசோதா தற்போது சட்டமாக்கப்பட்டுள்ளதன் மூலம், ஐரோப்பிய யூனியன் அமைப்புடன் பிரிட்டனை இணைப்பதற்காக கடந்த 1972-ஆம் இயற்றப்பட்ட ஐரோப்பிய சமுதாயச் சட்டம்' செல்லாததாகிறது.
ஐரோப்பிய கண்டத்தைச் சேர்ந்த 28 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியனில், கடந்த 1973-ஆம் ஆண்டு முதல் பிரிட்டன் அங்கம் வகித்து வருகிறது.
எனினும், ஐரோப்பிய யூனியனில் இருப்பதால், பிரிட்டன் தனது தனித்துவத்தை, இழந்துவிட்டதாக ஒரு சாரார் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்த நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பொது வாக்கெடுப்பு கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது.
அந்த வாக்கெடுப்பில், பெரும்பாலான வாக்காளர்கள் பிரெக்ஸிட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.