அடைக்கலம் தேடி குழந்தைகளுடன் அமெரிக்காவுக்கு வரும் அகதிகள் மீது இனி குற்றவியல் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட மாட்டாது என்று அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழையும் அகதிகளுக்கு எதிராக அந்த நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட இரும்புக் கொள்கை' தளர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புப ஆணையர் கெவின் மெக்கலீனன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு வரும் அகதி பெற்றோர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்காக பரிந்துரைக்கும் நடமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அகதிகளாக வரும் பெற்றோர்கள் மற்றும் காப்பாளர்களிடமிருந்து குழந்தைகளை வலுக்கட்டாயமாகப் பிரிக்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அரசாணையை அதிபர் டிரம்ப் பிறப்பித்துள்ளதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும், அதிபர் அறிவித்துள்ள குடியேற்றக் கொள்கையின் மற்ற அம்சங்களில் மாற்றம் எதுவும் இல்லாமல், அவை தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றார் அவர்.
அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக தஞ்சம் புகுவதற்கு எதிராக அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில்
வெளியிட்ட இரும்புக் கொள்கை அறிவிப்புக்குப் பிறகு, எல்லை தாண்டி வரும் பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளையும், சிறுவர்களையும் பிரித்து
தனியாக அடைத்து வைக்கும் நடைமுறை தீவிரப்படுத்தப்பட்டது.
புதிய கொள்கையின்படி, சட்டவிரோதமாக எல்லை தாண்டி வரும் அகதிகளுக்கு எதிராக குற்றவியல் வழக்கு பதிவு செய்வதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
பெரியவர்களுடன் வரும் சிறுவர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்ய சட்டத்தில் இடமில்லாததால், அவர்கள் பிரத்யேக காப்பகங்களில் தடுப்புக் காவலில் வைக்கப்படுகிறார்கள்.
கடந்த சில வாரங்களில் மட்டும் அடைக்கலம் தேடி அமெரிக்காவுக்கு வந்த பெற்றோர்கள் மற்றும் காப்பாளர்களிடமிருந்து 2,300-க்கும் மேற்பட்ட சிறுவர்களும், குழந்தைகளும் தனியாக பிரிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழலில், கம்பிகளுக்குப் பின்னால் அகதி சிறுவர்கள் அடைக்கப்பட்டுள்ள காட்சிகளும், அகதி குழந்தைகள் தங்களது பெற்றோருக்காக ஏங்கி அழும் உருக்கமான ஒலிப்பதிவுகளும் இணையதளங்களில் வெளியாகின.
இது, உலகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அகதி குடும்பத்தைப் பிரிக்கும் நடைமுறைக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மனைவி மெலானியா, மகள் இவாங்கா ஆகியோரே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சட்டவிரோத குடியேற்றங்களுக்கு எதிரான டிரம்ப்பின் இரும்புக் கொள்கைப்படி மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, இரக்கம் அற்ற, அநீதியான செயல் என மெலானியா டிரம்ப் விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், அகதி குடும்பங்களிலிருந்து குழந்தைகளையும், சிறுவர்களையும் பிரித்து வைக்கும் சர்ச்சைக்குரிய நடைமுறையைக் கைவிடும் அரசாணையில் அதிபர் டிரம்பப் புதன்கிழமை கையெழுத்திட்டார்.
எனினும், சட்டவிரோதக் குடியேற்றங்களுக்கு எதிரான தனது இரும்புக் கொள்கை தொடரும் எனவும் அமெரிக்க எல்லைகள் வழக்கமான உறுதியுடன் பாதுகாக்கப்படும் எனவும் டிரம்ப் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமைதி வழியில் போராட உரிமை உள்ளது: உச்சநீதிமன்றம்

தாய்மாா்கள் குறித்த கேரள முதல்வரின் கருத்தால் சா்ச்சை!
இந்தியாவின் தொழில் வளா்ச்சியில் தமிழகத்தை முன்மாதிரியாக உருவாக்குவோம்: அமைச்சா் பா்வேஸ்

கோவையில் ஹாக்கி இந்தியா தேசிய ஜூனியா் சாம்பியன்ஷிப்: இன்று தொடக்கம்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



