பாக்தாத்: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் மீது ஷூ வீசிய ஈராக் பத்திரிகையாளரான மண்டேசர் அல்-ஸைதி அந்நாட்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் 2008-ம் ஆண்டு டிசம்பரில் ஈராக் நாட்டிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார். அப்பொழுது பாக்தாத் நகரில் ஈராக் அதிபருடன் சேர்ந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின் இடையே ஈராக் பத்திரிகையாளர் மண்டேசர் அல்-ஸைதி திடீரென எழுந்து தனது ஷூக்களை கழற்றி புஷ்-ஐ நோக்கி வீசினார்.
ஆனால் உடனடியாக கீழே குனிந்து புஷ் ஷூ தாக்குதலில் இருந்து தப்பிவிட்டார். ஈராக்கில் நடக்கும் எல்லா சீரழிவுக்கும் புஷ்தான் காரணம் என்பதால் ஷூவை வீசியதாக அல்-ஸைதி தெரிவித்திருந்தார். விசாரணை முடிவில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது இந்த சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர் தனது நன்னடத்தையின் காரணமாக 9 மாதங்களிலேயே சிறையிலிருந்து அல்-ஸைதி விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் மண்டேசர் அல்-ஸைதி தற்பொழுது அந்நாட்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சாத்ர் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட உள்ளேன்; ஊழல் அரசியல்வாதிகளை சிறையில் தள்ளுவதே எனது இலக்கு. அப்போதுதான் நாடு முன்னேறும்' என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆந்திரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலங்களாக கண்டெடுப்பு

தில்லி கேபிடல்ஸின் பயிற்சியாளராகும் யுவராஜ் சிங்!

சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட முதல் பாடல்!

முதல்முறை அரேபிய படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மான்!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



