தசலோனிகி: கிரீஸ் நாட்டின் நகர ஆளுநர் ஒருவருக்கு பொதுமக்கள் நடு வீதியில் தர்ம அடி கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கிரீஸ் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாக இருப்பது தசலோனிகி. இந்த நகரத்தின் ஆளுநராக யின்னிஸ் போட்டரிஸ் (73) என்பவர் பதவி வகித்து வருகிறார். யின்னிஸ் போட்டரிஸ் பொதுவாகவே தேசியவாத எதிர்ப்பு கருத்து நிலைப்பாடு கொண்டவர். இதன் காரணமாக அவரது கருத்துக்களுக்கு குறிப்பிட்ட குழுக்களிடையே எதிர்ப்பு நிலவி வந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் முதல் உலகப்போரில் துருக்கி நாட்டவர்களால் கொல்லப்பட்ட கிரேக்க நாட்டு மக்களுக்கு நினைவு செலுத்தும் விழாவானது, தசலோனிகி நகரில் நடைபெற்றது. இதில் நகர ஆளுநர் என்ற முறையில் யின்னிஸ் போட்டரிஸ் கலந்து கொள்ள வந்திருந்தார்.
அவரது வருகை பற்றித் தகவலறிந்தவுடன் எதிர்ப்பு குழுக்கள் கூட்டமாக அங்கு வந்து ஆளுநர் யின்னிஸ் போட்டரிஸை சூழ்ந்து கொண்டு சரமாரியாக அடித்து உதைத்தனர். நிலை தடுமாறி அவர் கீழே விழுந்த பின்னரும் தாக்குதல் தொடர்ந்தது. பின்னர் போலீசாரால் மீட்கப்பட்ட ஆளுநர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த ஆளுநர் கூறியதாவது:
இது நான் சற்றும் எதிர்பார்க்காத ஒரு நிகழ்வு. பொதுமக்கள் தாக்கியதில் நான் நிலை குலைந்து போனேன். என் உடல் முழுவதும் சரமாரியாகத் தாக்குதல் நடத்தப்பட்டது. இது எனக்கு மிகுந்த மன வேதனையை அளித்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலை மறியலுக்கு இடையே சென்ற வாகன ஓட்டியை தாக்கிய திமுகவினர்! அமைச்சர் ராஜ்மோகன் பகிர்ந்த காணொலி

சிறையில் அடைத்தால் பேரவையில் பேசமாட்டோமா? ஜாமீனில் விடுதலையான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கேள்வி

கபினியிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் அடிப்பாலாறு வந்தடைந்தது!

பிகாரின் முன்னாள் ஆளுநர் டி. ஒய். பாட்டீல் காலமானார்!
விடியோக்கள்

உதயநிதியை இளைய கலைஞர் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்! | R.S. Bharathi | DMK | TVK



