வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உனை கியூபா அதிபர் மிகுவேல் டியாஸ்-கனேல் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து வட கொரிய அரசுக்குச் சொந்தமான கிசிஎன்ஏ செய்தி நிறுவனம் திங்கள்கிழமை தெரிவித்ததாவது:
வட கொரியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள கியூபா அதிபர் மிகுவேல் டியாஸ்-கனேல், அதிபர் கிம் ஜோங்கைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சர்வதேச விவகாரங்கள் குறித்தும், தங்களுக்கிடையிலான பொதுவான நலன்கள் குறித்தும் இருவரும் ஆழமாக விவாதித்தனர்.
பல்வேறு விவகாரங்களில் இரு தலைவர்களுக்கும் இடையே ஒருமித்த கருத்து நிலவியது என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
முன்னதாக, வட கொரியத் தலைநகர் பியாங்கியாங் விமான நிலையத்தில் தனது மனைவியுடன் ஞாயிற்றுக்கிழமை வந்திறங்கிய கியூபா அதிபர் மிகுவேல் டியாஸ்-கனேலை வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் நேரில் சென்று வரவேற்றார்.
டியாஸ்-கனேலுக்கு 21 குண்டுகள் முழங்க அரச வரவேற்பு அளிக்கப்பட்டது.
தென் கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனைகளை வட கொரியா கடந்த ஆண்டின் இறுதிவரை தொடர்ந்து நடத்தி வந்தது.
இதனால், வட கொரியாவுக்கும், அமெரிக்க-தென் கொரிய கூட்டணிக்கும் இடையே கடும் பதற்றம் நிலவி வந்தது.
இந்தச் சூழலில், தென் கொரியாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் வட கொரியா பங்கேற்றதைத் தொடர்ந்து, இரு கொரிய நாடுகளுக்கும் இடையே பதற்றம் தணிந்து இணக்கமான சூழல் ஏற்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஆகியோரிடையிலான வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்புகள் இரண்டு முறை நடைபெற்றது.
இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பையும் கிம் ஜோங்-உன் சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்களற்ற பிரதேசமாக்குவது உள்ளிட்ட 4 அம்ச தீர்மானத்தில் இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.
எனினும், அந்த ஒப்பந்த அம்சங்ககளை நிறைவேற்றுவதில் வட கொரியா முனைப்பு காட்டவில்லை என்று அமெரிக்காவும், இந்த விவகாரத்தில் அமெரிக்கா மிரட்டல் பாணியை கையாள்வதாக வட கொரியாவும் ஒன்றின் மீது ஒன்று குற்றம் சாட்டி வந்ததால், இந்த விவகாரத்தில் இழுபறி நீடித்து வருகிறது.
இந்தச் சூழலில், அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வரும் கம்யூனிஸ நாடான கியூபாவின் அதிபர் மிகுவேல் டியாஸ்-கனேல், வட கொரிய அதிபரை சந்தித்துப் பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுவதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் மறைவு: அன்புமணி இரங்கல்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆனி வருஷாபிஷேகம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

இந்திய சினிமாவிலேயே பாக்யராஜ் போல இன்னொருவர் இல்லை: ஊர்வசி






