குதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

சர்ச்சைக்குரிய ருமேனிய பொதுவாக்கெடுப்பு: போதிய வாக்குப் பதிவு இல்லாததால் தோல்வி?

ருமேனியாவில் ஒரே பாலினத்தவர்களின் திருமணங்களுக்கு எதிராக அந்த நாட்டு அரசமைப்புச் சட்டத்தில் மாற்றம் செய்வது குறித்து நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பு, போதிய

News image
Updated On :9 அக்டோபர் 2018, 12:58 am IST


ருமேனியாவில் ஒரே பாலினத்தவர்களின் திருமணங்களுக்கு எதிராக அந்த நாட்டு அரசமைப்புச் சட்டத்தில் மாற்றம் செய்வது குறித்து நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பு, போதிய வாக்குப் பதிவு இல்லாததால் ரத்தாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ருமேனியா அரசியல் சாசனத்தில் குடும்பம் என்பது இரண்டு பேர் சுய விருப்பத்துடன் திருமணம் செய்துகொள்வதன் மூலம் உருவாக்கப்படுகிறது என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
எனினும், அந்த வரையறையில் இரண்டு பேர் என்பதற்குப் பதில், ஒரு ஆணும், பெண்ணும் என்று மாற்றம் செய்ய வேண்டும் என்று பழைமைவாதிகள் வலியுறுத்தி வந்தனர்.
இரண்டு பேர் என்றிருந்தால் அது ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணங்களை ஊக்குவிக்கும் எனவும், எனவே, அதைத் தவிர்க்கும் வகையில் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். எனினும், அவ்வாறு மாற்றம் செய்தால் ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகள் பறிக்கப்படும் என்று மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், இதுதொடர்பாக பொதுமக்கள் கருத்தை அறிவதற்கான பொதுவாக்கெடுப்பு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது. எனினும், அதில் 20.41 சதவீத வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். பொதுவாக்கெடுப்புகளில் குறைந்தபட்சம் 30 சதவீதத்தினராவது வாக்களித்திருந்தால்தான் அந்த வாக்கெடுப்பு முடிவுகள் செல்லுபடியாகும். எனவே, இந்தப் பொதுவாக்கெடுப்பு ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பழமைவாத கிறிஸ்துவ மதத்தினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட ருமேனியாவில், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிராக அரசமைப்புச் சட்டத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு ஆதரவு அளிக்கும்படி பழமைவாதிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.
ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமண ஒப்பந்தங்களுக்கு ருமேனியாவில் ஏற்கெனவே சட்ட அங்கீகாரம் உள்ள நிலையில், இந்த மாற்றம் கொண்டு வந்தால் அந்த உரிமை பறிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக மற்றொரு தரப்பினர் கூறி வந்தனர்.
இந்தச் சூழலில், மிகக் குறைந்த வாக்குப் பதிவால் சர்ச்சைக்குரிய அந்தப் பொதுவாக்கெடுப்பு செல்லாததாகும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.