11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

பொருளாதாரம்: இரு அமெரிக்கர்களுக்கு நோபல் பரிசு

புதிய கண்டுபிடிப்புகளையும், சுற்றுச்சூழலையும் பொருளாதாரத்துடன் ஒருங்கிணைத்தமைக்காக அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் நார்தாஸ் மற்றும் பால் ரோமர் ஆகிய

News image
Updated On :9 அக்டோபர் 2018, 4:27 am IST


புதிய கண்டுபிடிப்புகளையும், சுற்றுச்சூழலையும் பொருளாதாரத்துடன் ஒருங்கிணைத்தமைக்காக அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் நார்தாஸ் மற்றும் பால் ரோமர் ஆகிய பொருளாதார நிபுணர்களுக்கு பொருளாதாரத்துக்கான நிகழாண்டின் நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை திங்கள்கிழமை வெளியிட்டு, நோபல் தேர்வுக் குழு கூறியதாவது:
பொருளாதார வளர்ச்சியை நிலையான வளர்ச்சியாகவும், நீண்ட கால வளர்ச்சியாகவும் ஆக்குவது எப்படி என்ற சவாலுக்கு தீர்வு அளித்தமைக்காக பேராசிரியர்கள் வில்லியமும், பால் ரோமரும் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுச்சூழலுடனும், புத்தாக்கச் சிந்தனைகளுடனும் சந்தைப் பொருளாதாரத்தை இணைத்ததன் மூலம், பொருளாதாரப் பகுப்பாய்வின் எல்லையை இந்த இருவரும் விரிவுபடுத்தியிருக்கிறார்கள். இவர்களில் வில்லியம் நார்தாஸ், பருவநிலை மாறுபாடு என்ற முக்கியப் பிரச்னையை பொருளாதாரத்தோடு இணைத்துள்ளார்.
பால் ரோமரைப் பொருத்தவரை, தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகளை பொருளாதார உத்திகளுடன் இணைத்துள்ளார் என்று நோபல் தேர்வுக் குழு குறிப்பிட்டுள்ளது.

வில்லியம் நார்தாஸ் (77)

Story image


அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவரான வில்லியம், தற்போது அதே கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். பொருளாதாரம் குறித்து இதுவரை 20-க்கும் மேற்பட்ட புத்தகங்களை இவர் எழுதியுள்ளார்.

பால் ரோமர் (62)

Story image


உலக வங்கியின் முதுநிலை துணைத் தலைவராக கடந்த ஜனவரி மாதம் வரை பொறுப்பு வகித்த ரோமர், தற்போது நியூயார்க் பல்கலைக்கழகக்தில் பணியாற்றி வருகிறார். இவர், அமெரிக்காவிலுள்ள பிலிப் எக்ஸடர் அகாதெமியில் பட்டம் பெற்றவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.