சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

எல்லையில் படைகள் நீக்கம்: கொரிய நாடுகள், ஐ.நா. மீண்டும் பேச்சுவார்த்தை

வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையிலான பான்முன்ஜோம் எல்லைப் பகுதியில், இரு தரப்பினரும் குவித்துள்ள படைகளை விலக்கிக் கொள்வது குறித்த

News image
Updated On :22 அக்டோபர் 2018, 8:06 pm


வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையிலான பான்முன்ஜோம் எல்லைப் பகுதியில், இரு தரப்பினரும் குவித்துள்ள படைகளை விலக்கிக் கொள்வது குறித்த பேச்சுவார்த்தை திங்கள்கிழமை மீண்டும் நடைபெற்றது.
இதுகுறித்து தென் கொரிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் படை விலக்கல் நடவடிக்கை குறித்து ஆய்வு செய்வதற்காக அந்தக் கூட்டம் நடைபெற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வட - தென் கொரிய நாடுகளிடையே இடையிலான பான்முன்ஜோம் எல்லை கிராமம் கூட்டு பாதுகாப்புப் பகுதி என்று அழைக்கப்படுகிறது. சுமார் 250 கி.மீ. தொலைவு கொண்ட அந்த எல்லைப் பகுதியில்தான் இரு நாட்டுப் படையினரும் நேருக்கு நேர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இரு தரப்பினருக்கும் பொதுவான பகுதி என்று அந்த எல்லைப் பகுதி அறிவிக்கப்பட்டிருந்தாலும், கடந்த 1976-ஆம் ஆண்டில் தென் கொரியத் தொழிலாளர்களை வட கொரிய வீரர்கள் தாக்கியதிலிருந்து இரு நாட்டு வீரர்களும் இங்கு பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அண்மைக் காலமாக இரு நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்படும் சமரச நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பான்முன்ஜோம் எல்லை கிராமத்தில் நிறுத்தப்பட்டுள்ள படைகளை விலக்கிக் கொள்வது குறித்த பேச்சுவாத்தை அந்த கிராமத்தில் கடந்த 16-ஆம் தேதி நடைபெற்றது .
இதில் வட மற்றும் தென் கொரிய பாதுகாப்புத் துறை அதிகாரிகள், கொரியப் பகுதிக்கான ஐ.நா. பாதுகாப்புப் படை அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிலையில், அந்தப் பேச்சுவார்த்தையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யவும், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தவும் தற்போது மீண்டும் அந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.