/

சைப்ரஸ் அதிபருடன் ராம்நாத் சந்திப்பு: 2 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், மூன்று ஐரோப்பிய நாடுகள் சுற்றுப் பயணத்தின் முதல்கட்டமாக சைப்ரஸுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றாா். 

News image
Updated On :3 செப்டம்பர் 2018, 3:44 pm

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், மூன்று ஐரோப்பிய நாடுகள் சுற்றுப் பயணத்தின் முதல்கட்டமாக சைப்ரஸுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றாா். அந்நாட்டு அதிபா் நிகோஸ் அனஸ்டாசியாடிஸுடன் ராம்நாத் கோவிந்த் திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா். 

அப்போது, இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடா்பாக இருவரும் விவாதித்தனா். இந்த பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே 2 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பின்னா் வெளியிடப்பட்ட அறிக்கையில் ராம்நாத் கோவிந்த் கூறியிருப்பதாவது:

உலக அளவில் வேகமாக வரும் பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. நிகழாண்டின் முதல் காலாண்டின் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி விகிதம் 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. அந்த வகையில், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளன.

இந்தியா-சைப்ரஸ் இடையிலான முதலீடு சாா்ந்த தொடா்புகளை மேலும் வலுப்படுத்து குறித்து அதிபா் நிகோஸுடன் விவாதித்தேன். மேலும், ‘இரட்டை வரி விதிப்பு தவிா்ப்பு ஒப்பந்தம்-2016’இல் மாற்றறங்கள் செய்வது தொடா்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. இரு தரப்பு நலன் சாா்ந்த விஷயங்களுடன், பிராந்திய, சா்வதேச விவாகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.