அமெரிக்காவில் கடுங்குளிர்: 2 மாகாணங்களில் அவசர நிலை பிறப்பிக்க காரணம் இதுதான்! பாருங்கள்!!

அமெரிக்காவின் மத்திய மேற்குப் பகுதிகளில் வரலாறு காணா கடுங்குளிர் வாட்டி வருகிறது. இப்பகுதியில் வசிக்கும் சுமார் 10 லட்சம் பேர் கடுங்குளிரில் தவித்து வருகிறார்கள்.
அமெரிக்காவில் கடுங்குளிர்: 2 மாகாணங்களில் அவசர நிலை பிறப்பிக்க காரணம் இதுதான்! பாருங்கள்!!
Updated on
2 min read


அமெரிக்காவின் மத்திய மேற்குப் பகுதிகளில் வரலாறு காணா கடுங்குளிர் வாட்டி வருகிறது. இப்பகுதியில் வசிக்கும் சுமார் 10 லட்சம் பேர் கடுங்குளிரில் தவித்து வருகிறார்கள்.

பல இடங்களில் மைனஸ் 32 முதல் மைனஸ் 50 டிகிரிக்குக் கீழ் வெப்பநிலை நிலவுகிறது. எரிவாயு குழாய்களும், தண்ணீர் குழாய்களும் உறைந்து போயிருப்பதால் மக்கள் செய்வதறியாது வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். வெளியே சென்றால் உடல்நிலை பாதிக்கப்படும் அளவுக்கு குளிர் நிலவுகிறது.

அதிகக் குளிர் வாட்டும் 2 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அன்டார்ட்டிகா பகுதியை விடவும் அதிக குளிர் நிலவும் பகுதியாக தற்போது அமெரிக்கா மாறியுள்ளது. பல இடங்களில் மின் இணைப்பு பாதிக்கப்பட்டிருப்பதால், மக்கள் கடும் சிரமங்களை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

நயாக்ரா நீர்வீழ்ச்சியே யாரோ அட்டாக் போட்டு நிறுத்தியது போல உறைந்து போய் உள்ளது.

இதுதான் உறைந்து போன நயாக்ரா நீர்வீழ்ச்சியின் க்ளோசப் ஷாட்.

நயாகரா நீர்வீழ்ச்சியின் மாறுபட்ட தோற்றம்.

பழைய இரும்புச் சாமான்கள் என்று நினைக்க வேண்டாம். பனிப்பொழிவால் விபத்துக்குள்ளாகி நின்றிருக்கும் வாகனங்களையும் விட்டுவைக்காத உறைபனி.

நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது என்னவென்று நிச்சயம் புரிந்திருக்கும். இது நியூ யார்க்கில் உள்ள பிரயன்ட் பார்க்கில் அமைக்கப்பட்டிருக்கும் வாட்டர் ஃபௌன்டெயின்.

உறைந்து போயிருக்கும் படகினை கரையில் நிறுத்தி வைக்க முயற்சிக்கும் ஊழியர்கள்.

கடுங்குளிர் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பள்ளி, கல்லூரி, நிறுவனங்கள் விடுமுறை விடப்பட்டுள்ளன. போக்குவரத்தும் முடங்கியுள்ளது.

இப்படித்தான் இருக்கிறது கடுங்குளிர் நிலைமை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com