டமாஸ்கஸ்: சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில், பொதுமக்கள் 70 பேர் பலியாகியுள்ள தகவல் வெளிவந்துள்ளது
சிரியாவின் பெரும்பான்மையான பகுதிகளை ஆக்கிரமித்திருந்த ஐ.எஸ்.பயங்கரவாதிகள் அரசுப்படையினரால் ஒடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் எஞ்சியுள்ள சிலர் யூப்ரட்டிஸ் நதிக்கரையின் ஓரத்தின் உள்ள மறைவிடங்களில் பதுங்கி வாழ்கின்றனர்.
அவ்வாறு டேய்ர் அல் சவுர் மாகாணத்தில் ஐ.எஸ்.பயங்கரவாதிகளை வேட்டையாடுவதற்காக பாகோவ்ஸ் நகரம் உள்ளிட்ட இடங்களில் வசித்துவந்த சுமார் 20 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு, தாற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் சிரியாவின் டேய்ர் அல் சவுர் மாகாணத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில், பொதுமக்கள் 70 பேர் பலியாகியுள்ள தகவல் வெளிவந்துள்ளது
அமெரிக்கா தலைமையிலான உள்நாட்டு விமானப்படை செவ்வாயன்று நடத்திய தாக்குதலில், அங்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக முகாமின் மீது குண்டுகள் விழுந்ததில் பொதுமக்களில் 70 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பேராவூரணி பகுதிகளில் நாளை மின்தடை

என்ஜின் பழுதாகி நடுக்கடலில் சிக்கிய கப்பல்: வாந்தி, மயக்கத்தில் தவித்த பயணிகள் மீட்பு

திருவையாறு அருகே இடி விழுந்து மரம் சேதம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடரும் கோடை மழை
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

