ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் ஜாமீன் மனுவை அந்நாட்டு உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
அல்-அஜீஸியா இரும்பாலை ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீஃப், கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டதையடுத்து கிசிச்சைக்காக ஜாமீனில் விடக்கோரி நவாஸ், இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர் ஃபரூக் மற்றும் மோக்ஸின் அக்தர் கயானி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், மருத்துவ காரணங்களை கூறி நவாஸை சிறையிலிருந்து விடுவிக்க முடியாது எனக்கூறி அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
நவாஸின் ஜாமீன் மனு விசாரணையின்போது அவரது கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் ஷாகித் ககான் அப்பாஸி, முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் கவாஜா ஆஷிப் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.
தீர்ப்பு குறித்து அப்பாஸி செய்தியாளர்களிடம் கூறுகையில். நவாஸ் ஷெரீஃப் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பது பல்வேறு மருத்துவ குழுக்களால் உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு நிச்சயம் ஏமாற்றமளிப்பதாகவே உள்ளது. இருப்பினும், இந்த தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதன் மூலம் இப்பிரச்சனைக்கு நல்ல தீர்வு காண்போம் என்றார்.
நவாஸ் ஷெரீஃபின் ஜாமீன் மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தநிலையில், உயர்நீதிமன்ற வளாகம் முழுவதும் அவரது கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் ஏராளமானோர் குழுமியிருந்தனர். ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அறிந்ததும் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, அங்கு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பின்னணி: அல்-அஜீஸா இரும்பாலை முறைகேடு வழக்கில் நவாஸுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24-ஆம் தேதி நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து, அவர் லாகூரிலுள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், சிறைச் சாலையில் அவரைப் பரிசோதித்த மருத்துவக் குழு நவாஸ் ஷெரீஃப் இருதய நோய், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவேண்டும் என்றும் பரிந்துரைத்தது. இதையடுத்து, சிகிச்சைக்காக ஜாமீனில் விடக்கோரி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் நவாஸ் மனுத் தாக்கல் செய்தார். தற்போது, அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து, நவாஸ் உடனடியாக சிறையிலிருந்து விடுதலையாவதில் சிக்கல் எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

நடிகர் ஜெயராம் காலில் விழுந்த தோனியின் மனைவி! ஏன்?

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



