தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

ஒப்பந்தத்துக்கு உள்பட்டே ஏவுகணைத் தயாரிப்பு

அமெரிக்காவுடன் மேற்கொண்டுள்ள அணு ஆயுத ஒப்பந்த அம்சங்களுக்கு உள்பட்டே, தனது 9எம்729 ரக ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக ரஷியா விளக்கமளித்துள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2019, 1:06 am IST


அமெரிக்காவுடன் மேற்கொண்டுள்ள அணு ஆயுத ஒப்பந்த அம்சங்களுக்கு உள்பட்டே, தனது 9எம்729 ரக ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக ரஷியா விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து ரஷிய அதிகாரிகள் கூறுகையில், அணு ஆயுத ஒப்பந்தத்தில் 500 முதல் 5,500 கி.மீ. தொலைவு பாயக்கூடிய 
ஏவுகணைகளுக்குத்தான் தடை உள்ளது. ஆனால், 9எம்729 ரக ஏவுகணைகள் அதிகபட்சமாக 480 கி.மீ. தொலைவுதான் பாய்ந்து செல்லும் என்று தெரிவித்துள்ளனர். 
அணு ஆயுத மோதலைத் தடுப்பதற்காக, அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக் கூடிய தொலைதூர ஏவுகணைகளை அழிப்பதற்கும், புதிய ஏவுகணைகளைத் தயாரிக்காமல் இருப்பதற்கும் அமெரிக்கா - ரஷியா இடையே 1987-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.