காத்மாண்டு: நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் வெள்ளம் மற்றும் அதனால் உண்டான நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெரும்பாலான வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பல நகரங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் ஒருபுறம் என்றால், மறுபுறம் ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன. இதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் மற்றும் காவல் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை நிலவரப்படி நேபாளத்தில் இதுவரை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 43 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் காயமடைந்து உள்ளனர். மேலும் 24 பேரை காணவில்லை என அந்நாட்டுக் காவல்துறையினர் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வைகையாற்றில் எழுந்தருளும் அழகருக்கு ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை, பட்டு வஸ்திரம்

ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழப்பு

பொதிகை விரைவு ரயிலை முதல் நடைமேடையில் நிறுத்தக் கோரிக்கை

திருத்தங்கலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


