லண்டன்: இந்தியாவுக்கு நாடுகடத்துதல் தொடர்பான வழக்கில் பிரபல தொழிலதிபர் நீரவ் மோடியின் போலீஸ் காவலை ஜுலை 25-ஆம் தேதி வரை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவிலுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி செய்த நீரவ் மோடி, அவரது உறவினர் மெஹூல் சோக்ஸி ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகி விட்டனர். இவர்களில் நீரவ் மோடி, லண்டனில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து நீரவ் மோடியை கைது செய்து ஒப்படைக்கும்படி ஸ்காட்லாந்து யார்டு போலீஸாருக்கு இந்திய அரசு கோரிக்கை விடுத்தது, இதையேற்று, லண்டனில் நீரவ் மோடியை கடந்த மார்ச் மாதம் 19ஆம் தேதி ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் கைது செய்தனர். அன்று முதல் லண்டனிலுள்ள வாண்ட்ஸ் ஒர்த் சிறையில் நீரவ் மோடி அடைக்கப்பட்டுள்ளார்.
தனக்கு ஜாமீன் கேட்டு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நீரவ் மோடி மனுதாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் நான்கு முறை மறுப்பு தெரிவித்தது. அப்போது நீரவ் மோடிக்கு ஜாமீன் அளித்தால், மீண்டும் சரணடையாமல் போகலாம் என்று லண்டன் நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில் இந்தியாவுக்கு நாடுகடத்துதல் தொடர்பான வழக்கில் பிரபல தொழிலதிபர் நீரவ் மோடியின் போலீஸ் காவலை ஜுலை 25-ஆம் தேதி வரை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நான்கு முறை ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் நீரவ் மோடி வியாழனன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவரது போலீஸ் காவலை ஜுலை 25-ஆம் தேதி வரை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையும் ஜூலை 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழில் வெளியாகும் வாழ - 2!

7 ஆண்டுகளுக்குப் பின்.. இந்தியாவில் நங்கூரமிட்ட ஈரானிய எண்ணெய் கப்பல்கள்

நெல் ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் கேட்ட கடிதத்தை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்!
சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


