கென்யா ஹெலிகாப்டர் விபத்து: விமானி உள்பட 5 பேர் பலி
கென்யாவில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் கென்யா விமானியும், அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 4 பேர் என சம்பவ


நைரோபி: கென்யாவில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் கென்யா விமானியும், அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 4 பேர் என சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கென்யாவின் வடமேற்கு பகுதியில் உள்ள துர்கானா ஏரியின் தீவில் அமைந்துள்ள தேசிய பூங்காவை சுற்றிப்பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். இதற்காக சுற்றுலாப் பயணிகள் ஹெலிகாப்டர்கள் மூலமாக அழைத்து வரப்படுவார்கள்.
இந்நிலையில், நேற்று முன்தினம் 2 ஹெலிகாப்டர்கள் சுற்றுலா பயணிகளை அழைத்துக்கொண்டு தேசிய பூங்காவிற்கு வந்தன. அவற்றில் ஒரு ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது, எதிர்பாராதவிதமாக தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில், கென்யாவைச் சேர்ந்த விமானி ஒருவரும், அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஹெலிகாப்டர் விபத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...