தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத மேயரை, அலுவலகத்தில் இருந்து இழுத்து வந்த மக்கள் அவரை லாரியில் கட்டி இழுத்துச் சென்றுள்ள சம்பவம் மெக்ஸிகோவில் நடந்துள்ளது.
மத்திய அமெரிக்க நாடான மெக்ஸிகோ போதை மருந்து கடத்தலுக்கு உலகப்புகழ் பெற்றது. இந்த நாட்டில் உள்ள சியாபாஸ் மாகாணத்தில் இருக்கும் லாஸ் மார்கரிட்டாஸ் (Las Margaritas)நகரத்தின் மேயராக இருப்பவர் ஜார்ஜ் லூயிஸ் எஸ்காண்டோன்(Jorge Luis Escandón Hernández).
தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி, அவர் மின்சாரம், குடிநீர், சாலை என்று எந்த வசதியும் செய்ய வில்லை என்று எஸ்காண்டானை பொதுமக்கள் தாக்கி லாரியில் கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.
நேற்று முன் தினம் இரவு மேயரின் அலுவலகத்துக்குள் நுழைந்த 50 peer koNta கும்பல், அவரை வெளியே இழுந்து வந்து தாக்கியுள்ளது. பின்னர், மேயரின் கைகளை ஒரு டிரக்கில் கட்டி அவரை சாலையில் இழுத்துச் சென்றுள்ளனர்.
அதற்குப் பின்னால் கம்பு மற்றும் குச்சிகளுடன் பல கிராம மக்கள் ஓடுகின்றனர். இந்தச் சம்பத்தின் வீடியோ வைரலாக பரவி வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கெங்கவல்லி அருகே தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மரணம்

முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகளில் வாக்கு சதவீதம் எவ்வளவு?

கோவை கணியூரில் வாக்களித்தவர்களுக்கு மரக்கன்றுகள்: மக்களிடையே பெரும் வரவேற்பு!

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


