
நியூஸிலாந்து மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் எதிரொலியாக, பொதுமக்கள் ஆயுதம் வைத்திருப்பதை அனுமதிக்கும் சட்டத்தை அந்த நாட்டு அரசு மேலும் கடுமையாக்கியுள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட கிறைஸ்ட்சர்ச் மசூதித் தாக்குதலுக்குப் பிறகு, பொதுமக்கள் தானியங்கித் துப்பாக்கிகளை வைத்திருப்பதைத் தடை செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பொதுமக்கள் ஏற்கெனவே வைத்திருக்கும் துப்பாக்கிகளை திரும்ப விலைக்கு வாங்கிக் கொள்ளும் திட்டமும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தகுதியுடைய நபர்கள் மட்டுமே துப்பாக்கிகள் வைத்திருக்க அனுமதிக்கும் புதிய சட்டத்தை நியூஸிலாந்து அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, போலீஸார் அனுமதி அளிக்கும் நபர்களுக்கு மட்டுமே துப்பாக்கிகளை விற்பனை செய்ய முடியும்.
அதுமட்டுமன்றி, துப்பாக்கி வைத்திருப்பவர்களின் விவரங்கள் அடங்கிய பதிவேட்டை தொடர்ந்து பராமரித்து வரவும் புதியச் சட்டம் இடமளிக்கும்.
கிறைஸ்ட்சர்ச் நகரிலுள்ள இரு மசூதிகளில் பிரென்டன் டாரன்ட் என்ற வெள்ளை இனவாதி நடத்திய சரமாரி துப்பாக்கிச் சூட்டில் 51 பேர் உயிரிழந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.